இந்திய வம்சாவளி பெண்ணை மோசமாக நடத்திய இளவரசர் ஹரியின் மனைவி: கொந்தளிக்கும் இணையம்
இன்று உலக மகளிர் தினம். ஆனால், பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்னும் சொல் வழக்கை மீண்டும் நிரூபித்திருக்கிறார் பெண் பிரபலம் ஒருவர்.
ஆம், தான் இனரீதியாக மோசமாக நடத்தப்பட்டதாக கண்ணீர் வடித்த இளவரசர் ஹரியின் மனைவியான மேகன்தான் அப்படி ஒரு மோசமான விடயத்தைச் செய்துள்ளார்.
இந்திய வம்சாவளி பெண்ணை கேலி செய்த மேகன்
பிரபல அமெரிக்க நடிகையான மிண்டி காலிங்கை (அவரது இயற்பெயர் வேரா மிண்டி சொக்கலிங்கம்) தனது நெட்ஃப்ளிக்ஸ் தொடருக்காக அழைத்துள்ளார் பிரித்தானிய இளவரசரான ஹரியின் மனைவியான மேகன்.
ஆனால், அந்த தொடரின்போது இந்திய வம்சாவளியினரான மிண்டியின் ஆங்கில மொழி உச்சரிப்பை மீண்டும் மீண்டும் கேலி செய்துள்ளார் மேகன்.
The main thing that I found overly offensive was on episode 2 from the With Love Meghan show .. when Meghan’s MEAN GIRL bully behaviour really came out . She just couldn’t help herself .
— The Hon. Lady E 💜🤍💚♊️👑🎨 💜🤍💚 (@witchinateacup) March 4, 2025
So there is Mindy doing the fawning over Meghan that is so obviously demanded by the script… pic.twitter.com/Wrud8C36xb
அந்த தொடரைப் பார்த்தவர்கள், இது வம்புக்கிழுத்தல், மொழியின் அடிப்படையில் காட்டப்படும் இனவெறுப்பு என மேகனை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.
மிண்டியின் தந்தையான ஆவுடையப்பன் சொக்கலிங்கம் ஒரு தமிழர், தாய், Roy-Sircar என்னும் ஸ்வாதி சொக்கலிங்கம்.
சொக்கலிங்கத்தின் குடும்பம் 1979ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தது. அந்த ஆண்டில்தான் மிண்டியும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |