இளவரசர் ஹரியை கட்டுப்படுத்தும் மேகன்: மனைவியைக் கண்டு நடுங்கும் ஹரி
இளவரசர் ஹரியின் மனைவியான மேகன், ஹரியை அலைக்களிப்பதாகவும், ஹரி தன் மனைவியைக் கண்டு நடுங்குவதாகவும் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
ஹரியை அலைக்களிக்கும் மேகன்
இளவரசர் ஹரி, தன்னை தன் குடும்பம் ஒரு உப பொருள் அதாவது ஸ்பேர் ஆக நடத்துவதாகக் கூறித்தான் தனது சுயசரிதைக்கு spare என பெயர் வைத்தார். ஆனால், ஹரி தன் திருமண வாழ்விலேயே ஒரு ஸ்பேராகத்தான் பயன்படுத்தப்படுகிறார் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ஏஞ்சலா லெவின் (Angela Levin) என்பவர்.
சமீபத்தில் ஹரியும் மேகனும் நைஜீரியா சென்றிருந்த நிலையில், ஹரியை மேகன் தான் செல்லுமிடத்துக்கெல்லாம் இழுத்தும் தள்ளியும் செல்வதை, ஆப்பிரிக்காவிலிருந்து வெளியான வீடியோவில் காணமுடிந்தது என்கிறார் ஏஞ்சலா.
பயந்து நடுங்கும் ஹரி
நைஜீரியாவில் நடந்தவற்றைப் பார்க்கும்போது, ஹரி தன் மனைவியைப் பார்த்து பயப்படுவது தெரிந்ததாக தெரிவிக்கிறார் ஏஞ்சலா.
மேகன் தான் செல்லுமிடத்துக்கெல்லாம் ஹரியை இழுத்துச் செல்கிறார், ஹரியைப் பார்த்து அவர் முறைத்ததும், ஹரி உடனடியாக அங்கிருந்து விலகிச் செல்கிறார். ஹரி, மேகனை முகவும் நேசிக்கிறார், ஆனால், மேகனோ மிகவும் கடினமான ஒரு பெண். ஆகவே, மேகனை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது ஹரிக்கு கடினமானதாக உள்ளது என்கிறார் ஏஞ்சலா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |