இளவரசர் ஹரி பிறந்தநாள் வாழ்த்து புகைப்படத்தில் மேகன் வெட்டி நீக்கப்பட்ட விவகாரம்: அரண்மனை விளக்கம்
இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி, தன் மனைவியுடன் சேர்ந்து குடும்பத்தினரை உலகறிய அவமதித்த நிலையிலும், அவரது பிறந்தநாளுக்கு ராஜ குடும்பம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள விடயம் மக்களைக் கவர்ந்துள்ளது.
அதே நேரத்தில், ஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவதற்காக தேர்வு செய்யப்பட்ட புகைப்படத்திலிருந்து மேகன் அகற்றப்பட்ட விடயம் இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
மேகன் புகைப்படம் வெட்டி நீக்கப்பட்ட விவகாரம்
இளவரசர் ஹரி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அவருக்கு ராஜ குடும்பம் சார்பிலும், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியர் சார்பிலும் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவதற்காக தேர்வு செய்யப்பட்ட புகைப்படம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அந்த புகைப்படம் 2018ஆம் ஆண்டு, அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் எடுக்கப்பட்ட புகைப்படமாகும்.
ஹரியும் மேகனும் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலிருந்து, மேகனை வெட்டி நீக்கிவிட்டு, ஹரி மட்டும் இருக்கும் பகுதியை அவருக்கு வாழ்த்துச் சொல்லும் புகைப்படமாக ராஜ குடும்பம் தேர்ந்தெடுத்துள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவின.
அரண்மனை விளக்கம்
இந்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள பக்கிங்காம் அரண்மனை வட்டாரம், புகைப்படத்திலிருந்து மேகன் வெட்டி நீக்கப்படவில்லை என்றும், டப்ளினில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், ஹரியும் மேகனும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது உண்மைதான்.
அதே நேரத்தில், ஹரி மட்டும் தனியாக இருக்கும் புகைப்படங்களும் அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டன.
அவற்றில் ஹரி மட்டும் இருக்கும் புகைப்படங்களில் ஒன்றுதான் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக தேர்வு செய்யப்பட்டதேயொழிய, ஹரியும் மேகனும் இணைந்திருக்கும் புகைப்படத்திலிருந்து மேகன் வெட்டி நீக்கப்படவில்லை என பக்கிங்காம் அரண்மனை விளக்கமளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |