இளவரசர் ஹரி இல்லாமல் தனியாக நண்பர்களுடன் நடனமாடச் சென்ற மேகன்
இளவரசர் ஹரிக்கும் மேகனுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் நிலவுவது குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
அதற்கேற்றாற்போல, இருவரும் தனித்தனியே பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார்கள்.
Image: WWD via Getty Images
தனியாக நண்பர்களுடன் நடனமாடச் சென்ற மேகன்
சமீபத்தில், மேகன் தன் கணவரான ஹரி இல்லாமல் தனியாக தன் நண்பர்களுடன் நடனமாடச் சென்றதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
தனது தோழியான Kadi Lee என்னும் பெண் துவக்கியுள்ள அழகு சாதனப்பொருள் ஒன்றின் அறிமுக விழாவுக்கு, மேகன், ஹரி இல்லாமல் தனியாகச் சென்றுள்ளார்.
அத்துடன், அவர் அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடைபெற்ற பார்ட்டியிலும் கலந்துகொண்டு நடனமாடியதாக தெரிகிறது.
ஹரி மேகன் திருமணத்தில், இந்த Kadi Leeதான் மேகனுக்கு சிகையலங்காரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |