இளவரசர் ஹரி மேகன் உறவு குறித்து முன்னாள் கணவர் கூறிய வார்த்தைகள்
பிரித்தானிய இளவரசர் மேகன் திருமணம் செய்துள்ள அமெரிக்கப் பெண்ணான மேகன் மெர்க்கல், ஏற்கனவே திருமணமாகி விவாரத்தானவர் என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.

என்றாலும், மேகனுடைய முதல் கணவர், ஹரி மேகன் குறித்து எதுவும் விமர்சித்ததே இல்லை.
இந்நிலையில், அவர் ஹரி மேகன் உறவு குறித்து தன் தோழி ஒருவரிடம் கூறிய வார்த்தைகளை அவர் சமீபத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஹரி மேகன் உறவு குறித்து முன்னாள் கணவர் கூறிய வார்த்தைகள்
மேகன், ஒரு நடிகையாக சின்னச் சின்ன வேடங்களில் தலைகாட்டிக்கொண்டிருந்த நேரத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ட்ரெவர் எங்கல்சன் என்பவரை காதலித்துவந்துள்ளார்.
ஆறு ஆண்டுகள் காதலித்தபின், 2011ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

ஆனால், அவர்களுடைய திருமண வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை. 2013ஆம் ஆண்டிலேயே இருவரும் பிரிந்துவிட்டதாக மேகன் அறிவிக்க, 2014ஆம் ஆண்டு இருவரும் முறைப்படி விவாகரத்து செய்தனர்.
அதைத் தொடர்ந்து பெத்தனி ஃப்ராங்கெல் என்ற பெண்ணுடன் சிறிது காலம் பழகிவந்துள்ளார் ட்ரெவர்.

அப்போது, தன் முன்னாள் மனைவியான மேகன், Suits என்னும் தொலைக்காட்சித் தொடரில் நடிப்பவர் என பெத்தனியிடம் கூறியுள்ளார் ட்ரெவர்.
அப்போது மேகன் அவ்வளவு பிரபலம் இல்லை என்பதால், அவரை பெத்தனிக்குத் தெரியவில்லையாம்.

ஆனால், அதற்குப் பிறகு மேகன் இளவரசர் ஹரியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாக, இது உங்கள் முன்னாள் மனைவியில்லையா என ட்ரெவரிடம் கேட்டுள்ளார் பெத்தனி.

அத்துடன், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், மேகன் ஹரியைத் திருமணம் செய்துகொள்வார் என நினைக்கிறீர்களா என கேட்டாராம் பெத்தனி.
ஓ, கண்டிப்பாக ஹரியை மேகன் திருமணம் செய்துகொள்வார் என்று கூறினாராம் ட்ரெவர்.

பின்னர் ட்ரெவர் ட்ரேசி கர்லேண்ட் என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |