சிறார் துஸ்பிரயோக விவகாரம்... மேகனின் தந்தை தாமஸ் மெர்க்கல் கைது
Meghan's father Thomas Markle arrested over allegations: மேகனின் தந்தை தாமஸ் மெர்க்கல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.
சிறார் துஷ்பிரயோகம் தொடர்பான படங்கள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் தாமஸ் மெர்க்கல் தங்கியிருந்த முதியோர் இல்லத்தில் இருந்து FBI அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைவிலங்கிடப்பட்டு
மேகன் மெர்க்கலின் தந்தையைக் கைது செய்வதற்காக, புளோரிடாவின் தம்பாவில் உள்ள அவரது இல்லத்திற்கு ஒரு டசினுக்கும் அதிகமான அதிகாரிகள் அதிரடியாகச் சென்றுள்ளனர்.

அவர் கைவிலங்கிடப்பட்டு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸில், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான படங்களின் தொகுப்பைக் கண்டறிந்ததாக அவரது மகன் மெர்க்கல் ஜூனியர் கூறியதைத் தொடர்ந்து, கடந்த மாதம் மெர்க்கல் சீனியர் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.
பிலிப்பைன்ஸில் உள்ள மெர்க்கல் சீனியரின் முன்னாள் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நான்கு பெட்டிப் பொருட்கள், கடந்த வாரம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அந்தப் பெட்டிகளில் கணினிகள், தொலைபேசிகள், ஹார்டு டிரைவ்கள் மற்றும் பழைய வீடியோ டேப்புகள் இருந்ததாக அறியப்படுகிறது. இந்த நிலையில், இன்று தாமஸ் மெர்க்கல் அவர் தங்கியிருந்த முதியோர் இல்லத்தில் இருந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கைப்பற்றிய பொருட்களில், மெர்க்கல் சீனியருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சாதனங்களில் இருந்த 7,500 சிறார்களின் புகைப்படங்களும் அடங்கும்.
அந்த முகம் சுழிக்கவைக்கும் படங்களில் உள்ள சிறார்களில் சிலர் பத்து வயதுடையவர்கள் என்று பிலிப்பைன்ஸ் உள்விவகார செயலாளர் ஜுவானிடோ விக்டர் ரெமுல்லா வெளிப்படுத்தியுள்ளார்.