அரச குடும்பத்துடன் மீண்டும் இணைய திட்டம்? மனதில் இருப்பதை வெளிப்படுத்திய மேகன் மெர்க்கல்
மீண்டும் அரச குடும்ப வாழ்க்கைக்கு திரும்ப விரும்பாத மேகன் மெர்க்கல்.
Variety பத்திரிக்கைக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாக அரச குடும்ப நிபுணர் கேட் நிகோல் தகவல்.
இளவரசர் ஹரியும் தானும் மீண்டும் அரச குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும் திட்டமில்லை என மேகன் மெர்க்கல் தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேகன் இது தொடர்பாக Variety பத்திரிக்கைக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாக அரச குடும்ப நிபுணர் கேட் நிகோல் தெரிவித்துள்ளார். அதன்படி அரச வாழ்க்கைக்கு திரும்பி வர விரும்பவில்லை என மேகன் கூறியதாக தெரிகிறது.
கடந்த மார்ச் 2020-ல் அரச பதவியில் இருந்து விலகிய பிறகு, மேகனும் இளவரசர் ஹரியும் கலிபோர்னியாவில் வாழும் நிலையில் அந்த வாழ்க்கையை மிகவும் விரும்புகிறார்கள் எனவும் நிகோல் தெரிவித்துள்ளார்.
Karwai Tang/WireImage
நிகோல் தொடர்ந்து பேசுகையில், மேகனும், ஹரியும் தங்களின் புதிய வாழ்க்கை மற்றும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது.
அவர்கள் கலிபோர்னியாவில் வாழ்கிறார்கள் மற்றும் தங்கள் வாழ்க்கையை நேசிக்கிறார்கள் என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது என்று நான் நினைக்கிறேன்.
அவர்கள் திரும்பி வர விரும்பவில்லை என்று நான் கருதுகிறேன் என கூறியுள்ளார்.