இளவரசர் ஹரியை விட்டு விலக முடிவு செய்துள்ள மேகன்: அடுத்த கட்ட நடவடிக்கை இதுதான்...
வெறும் இளவரசர் ஹரியின் மனைவியாக இருப்பது மேகனுக்கு சலித்துப்போய்விட்டதுபோலும், அவரை விட்டு விலக மேகன் திட்டம் வைத்துள்ளாராம்.
புகழ் விரும்பி மேகன்
திட்டம் போட்டு இளவரசர் ஹரியைக் கைப்பிடித்தவர் மேகன். ஆனால், அவர் எதிர்பார்த்த புகழ் அவருக்குக் கிடைக்கவில்லை என கருதுகிறார் மேகன்.
அதாவது, தான் வெறும் ஹரியின் மனைவி என்பதால் மட்டும் தனக்கு கிடைக்கும் கவனம் போதாது, தனியாக தான் சாதித்துக்காட்டவேண்டும் என விரும்புகிறார் அவர்.
Image: Getty Images
அடுத்த கட்ட நடவடிக்கை
ஆகவே, தான் முன்பு நடத்திவந்த The Tig என்னும் வலைப்பதிவை (blog) மீண்டும் துவங்குவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக ராஜ குடும்ப விமர்சகரான Kinsey Schofield என்பவர் தெரிவித்துள்ளார்.
மேகன், அந்த வலைப்பதிவை 2014 முதல் 2018வரை நடத்திவந்தார். ஹரியுடனான தனது காதல் வெளி உலகுக்கு அறிவிக்கப்பட்டதும், அவர் வலைப்பதிவில் பதிவேற்றம் செய்வதை நிறுத்திவிட்டார்.
Image: Getty Images
அந்த வலைப்பதிவு மீண்டும் இம்மாதம் (பிப்ரவரி) 14ஆம் திகதி முதல் செயல்படத்துவங்கும் என்று கூறும் Kinsey, எதிர்பார்ப்பதுபோல் அப்படி அது நடக்காவிட்டா
ல், மேகனின் திட்டம் முழுமையடையவில்லை என அர்த்தம். அது தயாராகிவிட்டது என மேகன் கருதும் நேரத்தில் அவர் அதைத் துவங்குவார் என்கிறார்.
image: Getty Images