இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தை விட்டு வெளியேற காரணம் மேகன் இல்லையாம்: புதிய தகவல்
இளவரசர் ஹரி, அமெரிக்கப் பெண்ணாகிய மேகனைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து ராஜ குடும்பத்தில் உருவாகிய பிரச்சினைகளைத் தொடர்ந்து, தம்பதியர் ராஜ குடும்பத்திலிருந்து வெளியேறினார்கள்.
ஆனால், இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேற நீண்ட காலத்துக்கு முன்பே திட்டமிட்டதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பல ஆண்டுகளாகவே ஆசை
ஆறு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2017ஆம் ஆண்டு, ஹரி கொடுத்த பேட்டி ஒன்றில், தான் ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறி, சாதாரண மக்களைப்போல வாழ விரும்பியதாக தெரிவித்திருந்தார்.
Image: POOL/AFP via Getty Images
ராஜ குடும்பத்தில் ஒருவராக வளர தனக்கு விருப்பம் இல்லை என்றும், பல ஆண்டுகளாகவே ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறவேண்டும் என்னும் எண்ணம் தனக்கு இருந்ததாகவும் தெரிவித்துள்ள ஹரி, தான் ராஜ குடும்பப் பொறுப்புகளில் நீடிக்க ஒரே ஒருவர் மீதான அன்புதான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.
Source: The Mirror
யார் அந்த ஒரு நபர்?
தன் பாட்டியாகிய மகாராணியாரிடம் உண்மையாக இருந்த தன் குணமே, தன்னை தொடர்ந்து ராஜ குடும்பத்தில் இருந்து தன் பொறுப்புக்களை செய்யத் தூண்டியது என்று கூறியுள்ளார் ஹரி.
Image: AFP via Getty Images
மகாராணியார் மீதான அன்பே ராஜ குடும்பத்தில் தான் தொடர்ந்து நீடிக்க காரணமாக அமைந்தது என்றும் கூறியுள்ளார் அவர்.