ராணிக்கு இறுதி மரியாதை செய்யும் இடத்தில் புன்னகை சிந்திய மேகன்! சர்ச்சையை கிளப்பிய புகைப்படங்கள்
ராணிக்கு இறுதி மரியாதை செய்யும் இடத்தில் மேகன் புன்னகைத்தது போன்ற முகபாவனையை வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு.
மகாராணி எலிசபெத்தை அவமரியாதை செய்யும் செயல் என விமர்சனம்.
பிரித்தானிய மகாராணிக்கு இறுதி மரியாதை செலுத்தும் இடத்தில் மேகன் புன்னகைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பலரும் ராணியை அவமரியாதை படுத்தும் செயல் இது என மேகனை விமர்சித்துள்ளனர்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8ஆம் திகதி காலமானார். அவரின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டி நேற்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு நடந்த இறுதி மரியாதை நிகழ்வில் மகாராணியின் குடும்பத்தார் கலந்து கொண்டனர். அப்போது கேட் மிடில்டனுடனான மேகனின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலானது.
Wpa Pool/Getty Images
ஏனெனில் அப்போது மேகன் கேட்டை பார்த்து சிரிப்பது போன்ற முகபாவனையை வைத்திருந்ததாக சமூகவலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்ததோடு இது ராணியை அவமரியாதை செய்யும் செயல் என விமர்சிக்கப்பட்டது.
இது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர், அப்படி அரச குடும்ப ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், மேகன் சிரித்தபடியே புகைப்படத்தில் இருந்தார். இதன்மூலம் ராணி எலிசபெத் மரபுகள் மற்றும் நெறிமுறைகளை அவமதிக்கிறார் என விமர்சித்துள்ளார்.
மற்றொருவரின் பதிவில், மேகன் சிரிப்பது போல தெரிகிறது. இதோடு அவர்கள் தேவாலயத்தில் ஒருவரையொருவர் கைகளை பிடித்திருந்தார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை, ராணியை காயப்படுத்துவது போன்ற செயல் எனக்கு வேதனையளிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
thenews.com.pk