காபி வியாபாரத்தில் இறங்கியுள்ள இளவரசர் ஹரியின் மனைவி மேகன்
இளவரசர் ஹரியின் மனைவி மேகனைப் பொருத்தவரை, அவருக்கு, ஏதாவது பணம் பார்க்கும் ஒரு விடயத்தைச் செய்துகொண்டே இருக்கவேண்டும்.
பணமே பிரதானம்
அரண்மனையை விட்டு வெளியேறியதும் அமெரிக்க தொலைக்காட்சிக்கு கண்ணீர் பேட்டிகள் கொடுத்து அதில் காசு பார்த்தார்கள் ஹரியும் மேகனும்.
பின்னர் நெட்ப்ளிக்ஸ் தொடர் ஒரு தொகையை ஈட்டித் தந்தது.
அதற்குப் பின் ஹரியுடைய ஸ்பேர் புத்தகம் வருவாய்க்கு வழிவகை செய்தது.
Image: clevrblends/Instagram
ஆனால், அப்படி அவர்கள் வருவாய் பார்த்த விடயஙக்ளில் எல்லாமே தங்கள் குடும்பத்தை புழுதிவாரித் தூற்றித்தான் கவனம் ஈர்த்தார்கள்.
இப்போது கொஞ்சம் வித்தியசமான ஒரு வேலையைச் செய்திருக்கிறார் மேகன்.
காபி வியாபாரத்தில் இறங்கியுள்ள மேகன்
இதுவரை ராஜ குடும்பத்தை குறைசொல்லியே காசு பார்த்த மேகன் இம்முறை காபி வியாபாரத்தில் இறங்கியிருக்கிறார். அதாவது, காபி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளார் மேகன்.
ஹரி மேகன் குடும்பம் வாழும் கலிபோர்னியாவை அடிப்படையாகக் கொண்டது Clevr Blends என்னும் காபி, தேநீர் தயாரிப்பு நிறுவனம்.
அந்த பிராண்ட் காபி மேகனுக்கும் ஹரிக்கும் பிரியமாம். ஆக, அதே நிறுவனத்திலேயே இப்போது முதலீடும் செய்துள்ளார் மேகன்.
Image: clevrblends/Instagram
இன்னொரு முக்கிய விடயம், அந்த நிறுவனத்தின் நிறுவனர், Hannah Mendoza என்னும் பெண். ஆக, ஒரு பெண்ணுக்கு தன் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளாராம் மேகன்.
நீண்ட காலமாக மேகன் சமூக ஊடகங்களிலிருந்து விலகியிருந்தார். இன்ஸ்டாகிராமில் அவரை 3 மில்லியன் பேர் பின்தொடர்ந்துவந்தார்கள்.
இந்நிலையில், தற்போது தான் முதலீடு செய்துள்ள காபி நிறுவனத்தில் புரமோஷனுக்காக மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்துள்ளார் மேகன்!
Image: clevrblends/Instagram
Image: clevrblends/Instagram