அரச நெறிமுறைகளை மீறிய இளவரசி மேகன் மார்க்கல்: வாக்களிக்குமாறு மக்களுக்கு அறிவுரை
அரச நெறிமுறைகளை மீறி அமெரிக்க தேர்தலில் மேகன் மார்க்கல் வாக்களிப்பு.
இது தேர்தல் நாள், இது வாக்களிப்பதற்கான நேரம்.
அரச குடும்ப நெறிமுறைகளை மீறி சசெக்ஸின் டச்சஸ் அமெரிக்காவின் இடைத் தேர்தலில் வாக்களித்துள்ளார்.
அமெரிக்காவில் பிரதிநிதி சபை மற்றும் செனட் சபைக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுக்கும் இடைக்கால தேர்தலில் வாக்களித்து இருப்பதாக பிரித்தானியாவின் சசெக்ஸ் இளவரசி மேகன் மார்க்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது ஆர்ச்சிவெல் இணையதளத்தில் மேகன் மார்க்கல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புன்னகையுடன் இருக்கும் மேகன் மார்க்கலின் டி-சர்ட்டில் நான் வாக்களித்து விட்டேன் (I voted) என்ற ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருந்தது.
மேலும் புன்னகையான புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட மற்றொரு இணையதள பதிவில் “வாக்கு” என்ற தலைப்பிடப்பட்டு பகிரப்பட்டு இருந்தது, அத்துடன் அந்த பதிவில் இன்று அமெரிக்காவில் தேர்தல் நாள் என்றும், இது வாக்களிப்பதற்கான நேரம் என்றும் எழுதப்பட்டு இருந்தது.
பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினர்கள் தொழில்நுட்ப ரீதியாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் பெரும்பாலும் அரசியல் விஷயங்களில் சமநிலையில் இருக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
உதரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் உயிரிழந்த பிரித்தானியாவின் மகாராணி இரண்டாம் எலிசபெத் தேர்தலில் வாக்களிப்பது இல்லை, இவற்றை மாட்சியமை விருப்பமாக பின் பற்றுவதற்கு மாறாக, மன்னர் அவ்வாறு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இணையதளம் தெரிவித்துள்ளது.
PA
மேலும் அரசியல் விஷயங்களில் ராணி கண்டிப்பாக நடுநிலையாக இருக்க வேண்டும் என்று அந்த இணைய தளம் தெரிவித்துள்ளது. வேல்ஸ் இளவரசராக பணியாற்றிய காலத்தில் பல பிரச்சனைகளுக்கு சார்லஸ் குரல் குடுத்தாலும், மன்னர் மூன்றாம் சார்லஸ் இந்த நடைமுறையை பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் செய்திகளுக்கு: மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா மீது முட்டை வீச்சு: நாடு அடிமைகளின் இரத்தத்தால் ஆனது என கோஷம்
ஆனால் பிரித்தானிய இளவரசி மேகன் மார்க்கல் முதல்முறையாக அமெரிக்க தேர்தலில் வாக்களிக்கவில்லை, இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Shutterstock