ஆண்டுக்கு 143,000 பவுண்டுகள் சம்பளம்... புதிய வேலைக்கு குறிவைக்கும் மேகன் மெர்க்கல்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் காதல் மனைவி மேகன் மெர்க்கல் புதிய தொழில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார் என்று கூறப்படுகிறது.
கடும் முயற்சிகள்
குறித்த முடிவால் அவர் ஆண்டுக்கு 143,000 பவுண்டுகள் சம்பளமாக ஈட்டலாம் என்றும் கூறப்படுகிறது. அரண்மனை ஊழியத்தில் இருந்து விடுபட்ட பின்னர் தமது நிலையை மேம்படுத்த கடும் முயற்சிகள் முன்னெடுத்து வருகிறார் மேகன் மெர்க்கல்.
@getty
இதில் ஹரி - மேகன் தம்பதி சாதித்ததும் உண்டு, சறுக்கியதும் உண்டு. ஆனால் தற்போது மேகன் மெர்க்கல் அரசியலில் களம் காண இருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்
சமீபத்தில் காலமான கலிபோர்னியா செனட்டர் பொறுப்புக்கு மேகன் மெர்க்கல் போட்டி இடுவார் என்ற தகவலும் கசிந்துள்ளது. கலிபோர்னியா செனட்டரான Dianne Feinstein சமீபத்தில் தமது 90வது வயதில் காலமானார்.
@getty
இந்த நிலையிலேயே மேகன் மெர்க்கல் அந்த பொறுப்புக்கு குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கலிபோர்னியா ஆளுநருக்கு மிக நெருக்கமான Gavin Newsom தெரிவிக்கையில், மேகன் மெர்க்கல் களமிறங்கினால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், மக்களை எந்த காலத்திலும் கணிக்க முடியாது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |