இளவரசர் ஹரியின் மகன் பிறப்பு குறித்து உருவாகியுள்ள சர்ச்சை: மேகனின் சகோதரி எழுப்பும் கேள்வி
சர்ச்சையின் மறு பெயரே மேகன் என்றாகிவிட்டது போலுள்ளது. ஆம், மீண்டும் இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் தொடர்பில் ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.
ஹரியின் மகன் பிறப்பு குறித்து உருவாகியுள்ள சர்ச்சை
இளவரசர் ஹரி, மேகன் தம்பதியரின் மூத்த மகன் ஆர்ச்சி. ஆர்ச்சியை மேகன் பெற்றெடுக்கவில்லை என்றும், அவர் வாடகைத் தாய் மூலமாகத்தான் பிறந்தார் என்றும் ஒரு செய்தி பரவி வருகிறது.
மேகனுடைய சகோதரியான சமந்தா மார்க்கல், ஹரி, மேகன் தம்பதியரின் மகனான ஆர்ச்சி பிறந்ததாக கூறப்படுவதற்கு 9 மாதங்களுக்கு முன், மேகன் தான் சேமித்து வைத்திருந்த உறைய வைத்த தன்னுடைய கருமுட்டைகளை மீண்டும் வாங்கியதாக தங்கள் தந்தையான தாமஸ் மார்க்கல் கூறியதாக தெரிவிக்கிறார்.
அப்படியானால், அது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான முயற்சியாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார் சமந்தா.
அப்படி ஒருவேளை வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றிருந்தால், எதற்கு உலகத்தின் முன் பொய் சொல்லவேண்டும்? உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டியதுதானே என்கிறார் சமந்தா.
அதே நேரத்தில், அப்படி ஹரி, மேகன் தம்பதியரின் மகனான ஆர்ச்சி வாடகைத் தாய்க்குப் பிறந்திருந்தால், அவர் ராஜ குடும்ப தாய்க்கு பிறக்காததால், ஆர்ச்சி அரியணையேறும் வரிசையில் வரமுடியாது,
ஆகவே, அவரை அரியணையேறும் வரிசையிலிருந்து நீக்கவேண்டும் என்கிறார் சமந்தா மார்க்கல்.
ஏற்கனவே மேகன் கர்ப்பமாக இருப்பதாக ஏமாற்றியதாக செய்திகள் பரவிய நிலையில், தற்போது ஆர்ச்சி வாடகைத் தாய்க்குப் பிறந்ததாக வெளியாகிவரும் செய்திகளைத் தொடர்ந்து, ஆர்ச்சியையும் லிலிபெட்டையும் அரியணையேறும் வரிசையிலிருந்து நீக்கவேண்டும் என பக்கிங்காம் அரண்மனைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருவதாகவும் ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |