மேகன் மார்க்கலை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலை கூறிய இளவரசி டயானாவின் தோழி!
இளவரசி டயானாவின் தோழி மேகன் மார்க்கலின் ஆடம்பர வாழ்க்கையைப் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறுகிறார்.
பிரித்தானிய அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான பிறகும் மேகனுக்கு அந்த பழக்கம் தொடர்ந்ததாக கூறினார்.
மேகன் மார்க்கலின் வாழ்க்கை முறை பற்றி சொல்லப்படாத சில கதைகளை அரச நிபுணர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ராயல் எழுத்தாளரும், மறைந்த இளவரசி டயானாவின் நெருங்கிய தோழியான டினா பிரவுன், நடிகையாக இருந்த காலத்தில் இருந்தே மேகன் மார்க்கல் விலையுயர்ந்த வடிவமைப்பாளரிடமிருந்து ஆடம்பரப் பொருட்களை இலவசமாகப் பெறுவதாகவும், அவர் இளவரசர் ஹரியை திருமணம் செய்த பிறகும், அதாவது பிரித்தானிய அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர் ஆனா பிறகும் பிறகும் இது தொடர்ந்தது என்று அவர் வெளிப்படுத்தினார்.
மேகன் மார்க்கல், ஆடம்பரப் பொருட்களை இலவசமாகப் பெறுவதற்கான வழிமுறையாக, இப்போது செயல்படாத தனது வலைப்பதிவான The Tig-ஐ பயன்படுத்துவார் என்று டினா பிரவுன் தனது The Palace Papers: Inside The House Of Windsor - The Truth And The Turmoil என்ற புத்தகத்தில் கூறுகிறார்.
மேலும், குறிப்பாக டிசைனர் ஸ்வாக் பைகளைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட மேகன் மார்க்கல் ஆடம்பர பிராண்டுகளின் விற்பனையாளர்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தரும் இலவசங்கள் மேகனால் மறுக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.