அவருடைய இன்னொரு முகத்தைப் பார்த்தால் பயந்துவிடுவீர்கள்... ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் குறித்த அதிர்ச்சி விமர்சனம்
புகைப்படங்களில் புன்னகையுடன் காணப்படும் மேகன் இனிமையானவர் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள், அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர்.
பயங்கரமான பெண்
இளவரசர் ஹரியின் தொண்டு நிறுவனமான Archewell Foundationஇல் பணியாற்றிய முன்னணி ஊழியர்கள் இருவர், மேகனுடைய தொல்லை காரணமாக தங்கள் பணியை விட்டுவிட்டு வெளியேறிவிட்டார்கள்.
அதை சுட்டிக்காட்டியுள்ள ராஜ குடும்ப நிபுணரான Angela Levin என்பவர், மேகன் உண்மையாகவே பயங்கரமானவர், அல்லது அச்சத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்று கூறியுள்ளார்.
இன்னொரு முகம்
மேகன் இனிமையான பெண் அல்ல, அப்படி ஹரி வேண்டுமானால் நம்பலாமே தவிர வேறு யாரும் அதை நம்பமுடியாது. அவருக்கு வேறு வழியில்லை, சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். சொல்லப்போனால், ஹரியிடமுள்ள மோசமான குணங்களையும் மேகன் வெளிக்கொண்டுவந்துகொண்டு இருக்கிறார் என்கிறார் Angela Levin.
மேகன் இனிமையாக நடந்துகொள்வார் என்று நீங்கள் எண்ணினால், ஏமாந்துபோவீர்கள் என்று கூறும் Angela Levin, அவர் நினைத்தால் இனிமையாக இருக்கமுடியும். ஆனால், அவருக்கு வேறொரு முகம் இருக்கிறது. அதைப் பார்த்தால் நீங்கள் பயந்துவிடுவீர்கள் என்கிறார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.