இளவரசர் ஹரியின் நீண்ட கால நண்பர் கூறிய ஒரு வார்த்தை... உறவை துண்டித்துக்கொண்ட ஹரி
பிரித்தானிய இளவரசர் ஹரியின் நீண்ட கால நண்பர் ஒருவர், மேகனைக் குறித்துக் கூறிய ஒரு விடயத்துக்காக, அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலிருந்தே அவரைத் தூக்கிவிட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரியின் நீண்ட கால நண்பர்களில் ஒருவர் Tom "Skippy" Inskip.
இளவரசர் ஹரி மேகன் திருமணத்தன்று, மாலை வரவேற்பு நிகழ்ச்சியில், அவரது நீண்ட கால நெருங்கிய நண்பரான Skippyயைக் காணவில்லை என்பதை பலரும் அப்பட்டமாகவே உணர்ந்திருக்கிறார்கள்.
காலையில் நடந்த திருமணத்துக்கு தன் மனைவி லாராவுடன் வந்திருந்த Skippy, மேகன் ஹரியை ரொம்பவே மாற்றிவிட்டார் என்று கூறியிருக்கிறார்.
ஆகவே, மாலை வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து அவரது பெயரை ஹரி நீக்கிவிட்டாராம்.
தங்கள் வாழ்வில் இனி யாரெல்லாம் இருக்கவேண்டும் என்பதை காட்டும் விதமாக அந்த வரவேற்பு நிகழ்ச்சி விருந்தினர் பட்டியல் அமைந்திருந்ததாக ஹரியின் நண்பர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.