மூத்த ராஜகுடும்பத்து உறுப்பினர்களைவிட மேகன் மெர்க்கலுக்கு மக்கள் ஆதரவு: வெளியான புதிய தகவல்
மேகன் மெர்க்கலுக்கு தற்போதும் இளம் பிரித்தானியர்களிடையே செல்வாக்கு
25 வயதுக்கு மேற்பட்ட மக்கள் 23% பேர்கள் இளவரசர் வில்லியம் என பதிலளித்துள்ளனர்.
அமெரிக்காவில் குடியேறிய பின்னர் மேகன் மெர்க்கலின் மக்கள் செல்வாக்கு பிரித்தானியாவில் சரிவடைந்தாலும், மூத்த ராஜகுடும்பத்து உறுப்பினர்களைவிட மக்களிடையே நன்மதிப்பு அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.
தமது காதல் கணவர் இளவரசர் ஹரியுடன் பிரித்தானியாவைவிட்டு வெளியேறி, அமெரிக்காவில் குடியேறியிருந்தாலும், 41 வயதான மேகன் மெர்க்கலுக்கு தற்போதும் இளம் பிரித்தானியர்களிடையே செல்வாக்கு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Credit: BackGrid
ராணியார் மறைவுக்கு பின்னர் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் மக்களின் உண்மையான மன நிலை வெளிப்பட்டுள்ளது. வேல்ஸ் இளவரசராக பொறுப்பேற்றுள்ள வில்லியம் மற்றும் கேட் தம்பதி முதலிடத்திலேயே இருக்க, ஹரி மற்றும் மேகன் தம்பதி தொடர்பிலேயே கருத்துகள் வேறுபட்டுள்ளது.
மிகவும் பிடித்தமான ராஜகுடும்பத்து உறுப்பினர் யார் என்ற கேள்விக்கு 18 முதல் 24 வயதுக்கு உட்பட்ட 29 சதவீத மக்கள் இளவரசர் ஹரியை தெரிவு செய்துள்ளனர். ஆனால் 25 வயதுக்கு மேற்பட்ட மக்கள் 23% பேர்கள் இளவரசர் வில்லியம் என பதிலளித்துள்ளனர்.
@getty
ஹரிக்கு இவர்களில் 16% பேர்களே ஆதரவளித்துள்ளனர். மேலும், நாட்டின் அடுத்த ராணியாராக வலம்வரவிருக்கும் கமிலாவுக்கும் மேகன் மெர்க்கலுக்கும் 9% மட்டுமே மக்கள் நன்மதிப்பு அளித்துள்ளனர்.
24 வயது வரையான இளைஞர்கள் மத்தியில் வில்லியம் மற்றும் கேட் தம்பதிக்கு அதிக மதிப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.