இளவரசர் ஹரிக்கு அழுத்தம் கொடுக்கும் மேகன்! அரச குடும்பத்துடன் மீண்டும் இணைவார்களா?
பிரித்தானிய அரச குடும்பத்துடன் மீண்டும் உறவு பாலத்தை கட்டமைக்க மேகன் மார்க்கல் இளவரசர் ஹரியை ஊக்குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல்
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் ஆகியோர் பிரிட்டிஷ் அரச குடும்பத்துடன் மீண்டும் இணைய முயற்சிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அரச குடும்ப விவரங்கள் அறிந்தவரான டாம் குவின் கூறுகையில், மேகன் மார்க்கில் இளவரசர் ஹரியை தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணையுமாறு ஊக்குவித்து வருவதாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
WireImage
அத்துடன் இது தொடர்பாக தி மிரர் பத்திரிகையில் பேசிய குவின், இளவரசர் ஹரிக்கு மேகன் மார்க்கல் அழுத்தம் கொடுப்பதற்கு பின்னணியில் வியாபார நோக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அரச குடும்பத்தினருடன் நல்லுறவு இருப்பது தங்கள் பிராண்டிற்கு நன்மை அளிக்கும் என்றும் குவின் கருதுகிறார்.
சசெக்ஸ் தம்பதியான இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கல் தொடர்ந்து தங்கள் அரச பட்டங்களை தொண்டு பணிகளுக்கும் தனிப்பட்ட முயற்சிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மன்னிப்பு கேட்டுக் கொள்வதற்கும் குறைந்த அளவிலான அரச கடமைகளுக்கு திரும்புவதற்குமான "மங்கலான நம்பிக்கைகள்" ஹரிக்கு இருக்கலாம் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
Getty Images
சிக்கலான பாதை
இருப்பினும், மீண்டும் இளவரசர் ஹரி இணைவதற்கான பாதை சிக்கலானதாக தோன்றுகிறது.
இளவரசர் ஹாரியின் "Spare" என்ற சுயசரிதையின் வெளியீடு குடும்பத்தினரிடையே பிளவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |