ஹரியை மேகன் தூக்கி எறிந்துவிட்டு வேறு கோடீஸ்வரரை கைபிடிப்பார்! இளவரசர் முன்னாள் காதலி கருத்து
மேகன் மெர்க்கல் இளவரசர் ஹரியை தூக்கி எறிந்துவிட்டு, அமெரிக்க கோடீஸ்வரரை கைபிடிப்பார் என இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் காதலி கூறியுள்ளார்.
லேடி விக்டோரியா
இளவசரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரச குடும்பத்திற்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் மேகன் தொடர்பில் இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் காதலி லேடி விக்டோரியா கூறியுள்ள கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அளித்துள்ள பேட்டியில், ஹரி - மேகன் தம்பதியின் பந்தம் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரலாம். இது இவ்வளவு காலம் நீடிப்பது எனக்கு உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.

KIRSTY O'CONNOR/POOL/AFP VIA GETTY, DAVID M. BENETT/DAVE BENETT/GETTY/ITV
ஹரியை பிரிந்து...
இந்த பந்தம் உடைந்து ஹரி மீண்டும் பிரித்தானியாவுக்கு வருவார் என நினைக்கிறேன்.
மேகன் ஹரியை கைவிட்டு, அமெரிக்க கோடீஸ்வரர் உடன் செல்வார் என கூறியுள்ளார்.
விக்டோரியா கடந்த 1990களில் சார்லஸ் சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூவை காதலித்து பின்னர் பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        