இவர்கள் ராஜ குடும்பத்தினரே கிடையாது... இளவரசர் ஹரி மேகன் மீது கடும் விமர்சனம்
தங்களுக்கு தனிமை வேண்டும் என்று கூறி ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிய இளவரசர் ஹரியும் மேகனும், இப்போது ராஜ குடும்பத்தின் பெயரைச் சொல்லி புகழை சம்பாதிக்கப் பார்க்கிறார்கள் என கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
ராஜ குடும்பத்தினர் எப்படி அரசு முறைப் பயணமாக மற்ற நாடுகளுக்குச் செல்வார்களோ, அதேபோல சமீபத்தில் நியூயார்க் சென்றுவந்தார்கள் ஹரியும் மேகனும். மூத்த அரசியல்வாதிகளை சந்திப்பது, தடுப்பூசி மற்றும் கொரோனா குறித்து உரையாற்றுவது என அவர்கள் மேற்கொண்ட செயல்களுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
தனிமை வேண்டும் என்று கூறி ராஜ குடும்ப பொறுப்புகளை உதறிவிட்டு ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறிய ஹரியும் மேகனும், நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படங்கள், பெரிய நேர்முகப் பேட்டிகள், ராஜ குடும்ப பயண போன்ற பயணங்கள் என இப்போது தனியாக ஒரு ராஜ குடும்பத்தை உருவாக்குவது போல நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இப்போது ராஜ குடும்ப உறுப்பினர்களும் கிடையாது, ராஜ குடும்பத்தின் பிரதிநிதிகளும் கிடையாது என்று கூறும் ராஜ குடும்ப விமர்சகரான Charles Rae என்பவர், தங்களுக்கு தனிமை வேண்டும் என்பதை தெளிவுபடக் கூறினார்கள் அவர்கள். ஆனால், அவர்களே தொடர்ந்து அவர்களது தனிமையை மீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்கிறார்.
[EJMXQ8 ]