மேகன்-ஹரி உறவில் விரிசல்., ராணி எலிசபெத்தின் மரணத்தை முன்னறிவித்த புதிய நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு
மேகன் மார்க்கல் மற்றும் இளவரசர் ஹரி இறுதியில் பிரிந்துவிடுவார்கள் என எதிர்காலத்தை கணித்து கூறும் நபர் ஒருவர் கணித்துள்ளார்.
இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலின் உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கும், அவர்கள் 'இறுதியில் பிரிந்துவிடுவார்கள்' என்று ராணி எலிசபெத்தின் மரணத்தை கணித்தவர் தெரிவித்துள்ளார்.
புதிய நாஸ்ட்ராடாமஸ்
'புதிய நாஸ்ட்ராடாமஸ்' என்று அழைக்கப்படும் கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர் (Craig Hamilton-Parker), இளவரசர் ஹரியுடனான மேகனின் உறவு முறிவு ஏற்படத் தொடங்கும் என்றும், இறுதியில் அவர்கள் பிரிந்துவிடுவார்கள் என்றும், இதனால் ஹரி 'ஆழ்ந்த குழப்பத்தில்' இருப்பார் என்றும் கூறினார்.
Getty Images
மேகன் மார்க்கல் மட்டும் தனியாக ஓப்ராவுடன் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நிலை வரும் என்றும் அவர் கணித்தார்.
முந்தைய சரியான கணிப்புகள்
கிரேக் ஹாமில்டன்-பார்க்கர் கொரோனா வைரஸ் தொற்றுநோய், பிரெக்ஸிட், டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக வருவார் மற்றும் பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் கூட சரியாகக் கணித்துள்ளார்.
மிக சமீபத்தில், மன்னர் மூன்றாம் சார்லஸ் முட்டைகளால் தாக்கப்படுவார் என்பதை கூட கணித்ததாக கூறப்படுகிறது.
கலிபோர்னியாவில் வசிக்கும் அரச தம்பதியினருக்கு இடையே பிளவு இருப்பதாக செய்திகளுக்கு மத்தியில் மேகன் மார்க்கல் மற்றும் இளவரசர் ஹரி பற்றிய கிரேக் கணிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.