மகன் ஆர்ச்சி குறித்த இனவாத கருத்து... மன்னர் சார்லஸ் பதிலை ஏற்றுக்கொண்ட மேகன் மெர்க்கல்
தமது மகன் ஆர்ச்சி தொடர்பில் ராஜ குடும்பத்து உறுப்பினர் ஒருவரின் இனவாத கருத்து குறித்து புகார் தெரிவித்த மேகனுக்கு மன்னர் சார்லஸ் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேகன் மெர்க்கல் வெளிப்படை
மேலும், மன்னர் சார்லஸ் அளித்த விளக்கத்தை மேகன் மெர்க்கல் ஏற்றுக்கொண்டுள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
@reuters
இளவரசர் ஹரி - மேகன் தம்பதியின் மகன் ஆர்ச்சி தொடர்பில், ராஜ குடும்பத்தில் ஒருவர் இனவாத கருத்து கூறிய விவகாரம் 2021ல் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் மேகன் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் அப்போது பூதாகரமாக வெடித்தது. பல விவாதங்களையும் ஏற்படுத்தியது. ஆனால் அப்படியான கருத்தை யார் வெளிப்படுத்தியிருந்தார் என்பது மட்டும் மேகன் மெர்க்கல் வெளிப்படுத்தவே இல்லை.
@wireimage
இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பில் மேகன் மெர்க்கல் மன்னர் சார்லசிடம் கடிதம் மூலமாக தமது கவலையை வெளிப்படுத்தியிருந்துள்ளார். மட்டுமின்றி, அந்த கடிதத்தில் அவர் ராஜ குடும்பத்திற்குள் சுயநினைவற்ற இன சார்பு பற்றி விவாதித்ததாக கூறப்படுகிறது.
மன்னருக்கு மேகன் மெர்க்கல் நன்றி
மேலும், 2021ல் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் வெளிப்படுத்தாத அந்த ராஜ குடும்பத்து உறுப்பினர் பெயரை மன்னர் சார்லசிடம் மேகன் மெர்க்கல் வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், தமது கவலையை போக்கும் வகையில் உரிய விளக்கமளித்த மன்னருக்கும் மேகன் மெர்க்கல் நன்றி தெரிவித்துள்ளார்.
@getty
இந்த நிலையில், தற்போது ஆர்ச்சி தொடர்பான இனவாத கருத்துக்கு மன்னர் அளித்த விளக்கத்தையும் மேகன் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும்,
இது திட்டமிட்ட ஒரு செயல் அல்ல எனவும், உண்மையில் அது ஒரு இனவாத கருத்து அல்ல எனவும் மன்னர் சார்லஸ் விளக்கமளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.