மேகனின் டயட் ரகசியம் இது தான்! இந்த உணவுகளை ஒரு பிடி பிடிப்பாராம்
மேகன் மெர்க்கலின் விருப்பமான உணவுகள்.
காலை உணவை எப்போதும் அவர் தவிர்க்க மாட்டார் என தகவல்.
இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் ஒரு உணவு பிரியர் ஆவார்.
இரண்டு குழந்தைகளின் தாயான அவர் எப்போதும் தனது காலை உணவை தவிர்த்தது கிடையாது. அவர் சத்தான உணவுகளை தான் சாப்பிடுவார். இது தொடர்பாக எழுத்தாளர்கள் Omid Scobie and Carolyn Durand தெரிவிக்கையில், அவரது காலை உணவு ஒரு கப் வெந்நீர் மற்றும் ஒரு எலுமிச்சை துண்டுடன் தொடங்கும்.
அதை தொடர்ந்து மேகனுக்கு பிடித்த உணவான ஸ்டீல்-கட் ஓட்ஸ் (பொதுவாக பாதாம் அல்லது சோயா பாலில் செய்யப்படுகிறது) மற்றும் வாழைப்பழங்கள் சாப்பிடுவார். இதோடு சீஸ் உடன் ஆம்லெட் சாப்பிடுவதையும் அவர் விரும்புவார் என கூறப்பட்டுள்ளது.
Pinterest
மதிய உணவு தொடர்பாக மேகன் ஒரு முறை கூறுகையில், நான் எப்போதும் சிலருடன் சேர்ந்து சாப்பிடுவதை விரும்புவேன். ஏனெனில் உணவுகளை பகிர்ந்து கொள்ளலாம் என கூறியிருந்தார்.
மதிய உணவு நேரத்தில் பொதுவாக மேகன் நல்ல பசியுடன் இருப்பார்.
சஷிமி அல்லது சாலடுகள் உணவில் அடங்கும், இரவு குறைவாகவே அவர் சாப்பிடுவார்.
சைவ உணவுகளை வாரத்தில் ஒரு நாள் சாப்பிடவும் மேகன் விரும்புவார்.
மதிய வேளையில் காபிக்கு பதிலாக க்ரீன் ஜூஸ் குடிப்பார், ஏனெனில் அதன் மூலம் ஆற்றலை பெற தான். வாழைப்பழ பிரெட், சிக்கன், கடல் உணவுகள் போன்றவையும் மேகனின் விருப்பமான உணவு பட்டியலில் உள்ளது.
newshub