மேகன் மெர்க்கல் காலணியில் காணப்பட்ட அந்த மர்ம குறியீடு: குழப்பத்தில் அதிர்ந்த மக்கள்
மேகன் மெர்க்கல் ஒரு ஜோடி எளிமையான ஆனால் நேர்த்தியான குதிகால் காலணி அணிந்திருந்தார்.
மூன்று நேரான மற்றும் ஒரு வளைந்த கோடுகள் ஏன் அதில் காணப்பட்டது என்று பலர் ஆச்சரியப்பட்டனர்.
மறைந்த ராணியாருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்ற மேகன் மெர்க்கல் அணிந்திருந்த காலணிகள் பார்வையாளர்கள் மற்றும் பொது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வாரம் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் ராணியாருக்கான அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதில் ராஜகுடும்ப உறுப்பினர்களுடன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் கலந்துகொண்டனர்.
@getty
அப்போது கருப்பு உடையில் காணப்பட்ட மேகன் மெர்க்கல், ஒரு ஜோடி எளிமையான ஆனால் நேர்த்தியான குதிகால் காலணி அணிந்திருந்தார். ராஜகுடும்ப முறைப்படி ராணியாருக்கு மேகன் மெர்க்கல் மரியாதை செலுத்தியபோது, அவரது காலணியில் காணப்பட்ட அந்த மர்ம குறியீடு பார்வையாளர்கள் கண்களில் பட்டுள்ளது.
மூன்று நேரான மற்றும் ஒரு வளைந்த கோடுகள் ஏன் அதில் காணப்பட்டது என்று பலர் ஆச்சரியப்பட்டனர். ஆனால், P மற்றும் A என்ற அந்த குறியீடுக்கு உண்மையில் என்ன அர்த்தம் என்பதை பேஷன் வல்லுநர்கள் விரைவாக கண்டறிந்தனர்.
மேகன் மெர்க்கள் அணிந்திருந்த அந்த கிளாசிக் ஷூக்களை பெர்க்ஷயரை சேர்ந்த உயர்தர ஆடை வடிவமைப்பாளரான பால் ஆண்ட்ரூ தயாரித்துள்ளார், அவர் தற்போது நியூயார்க்கில் இருந்து தனது விலையுயர்ந்த காலணிகளை விற்பனை செய்து வருகிறார்.
@reuters
ராஜகுடும்ப பொறுப்புகளில் இருந்து விலகி, அமெரிக்காவுக்கு செல்லும் முன்னர் அயர்லாந்தில் முன்னெடுக்கப்பட்ட விருந்தில் கலந்துகொண்ட மேகன் மெர்க்கல், அப்போது அணிந்திருந்த காலணியாக இருக்கலாம் என்றே அவரது ஆதரவாளர்கள் கருதினர்.
ஆனால் அதன் பின்னரே, பால் ஆண்ட்ரூ வடிவமைத்த காலணி என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் ஹால் வரையில் முன்னெடுக்கப்பட்ட ராணியாரின் இறுதி ஊர்வலத்தில் மேகன் மெர்க்கல் தமது காதல் கணவருடன் கலந்துகொண்டார்.
@AP
ராணியாரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக செய்தி வெளியானபோது மேகனும் ஹரியும் ஐரோப்பாவில் இருந்தனர், இதனையடுத்து இளவரசர் ஹரி தமது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகைக்கு விரைந்தார்.
ஆனால், அவர் அங்கு சென்று சேரும் முன்னர் ராணியார் காலமான தகவல் உலக மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.