இளவரசர் ஹரியை பணத்துக்காகவும், புகழுக்காகவும் குறிவைத்த மேகன் மார்க்கல்! அரச வரலாற்றாசிரியர் கடும் குற்றசாட்டு
இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு இளவரசர் ஹரி சோகத்தில் இருந்ததை மேகன் மார்க்கல் ஒருவகையில் பயன்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், பணம் மற்றும் புகழுக்காக மேகன் மார்க்கல் ஹரியை குறிவைத்ததாக கூறப்படுகிறது.
உணர்ச்சி ரீதியாக அன்பும் ஆதரவும் தேவைப்பட்ட இளவரிசை ஹரியை மேகன் மார்க்கல் பணத்துக்காகவும் புகழுக்காகவும் குறிவைத்ததாக பிரித்தானிய அரச நிபுணர் டாம் போவர் எனும் Thomas Michael Bower கூறுகிறார்.
அரச குடும்பத்தின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் Thomas Michael Bower மேகன் வேண்டுமென்றே ஹரியை குறிவைத்ததாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இளவரசர் ஹரி தனது தாயார் இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறுகிறார்.
Getty Images
தான் குழந்தையாக இருந்தபோது தன்னிடமும் தனது தாய் டயானாவிடமும் சார்லஸ் நடந்துகொண்ட விதமும், அதைத்தொடர்ந்து தனது தாயின் மரணமும் ஹரியை உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும், மேகன் செல்வத்தை விரும்பினாள், புகழை விரும்பினாள், அவர் ஹரியை குறிவைத்ததில் சந்தேகமே இல்லை என்று கூறிய Bower, ஹரியின் பால்ய நண்பராக இருந்த ஒருவரைக் கண்டுபிடித்து, அவர் மூலமாக தனனை அறிமுகப்படுத்திக்கொண்டார் என கூறினார்.
அதையடுத்து, ஹரியும் "ஒரு தேவையுள்ள மனிதனைப் போல, உயிர் காக்கவந்த ஒரு லைஃப் ராஃப்ட் போல" மேகன் மார்க்கலை ஒட்டிக்கொண்டார் என்று கூறினார்.
Getty Images
குழந்தை பருவ அதிர்ச்சியின் விளைவாக ஹரி மனதளவில் உடைந்துபோன மற்றும் மனஉளைச்சலுக்கு ஆளான நபராக இருந்தார் என்றும், அவரை எப்படி வெல்வது என்பது மேகன் மார்க்கலுக்குத் தெரியும் என்றும் Bower கூறினார்.
Bower ஒரு பிரித்தானிய எழுத்தாளர் மற்றும் முன்னாள் பிபிசி பத்திரிகையாளர் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஆவார். அவர் தனது புலனாய்வு பத்திரிகை மற்றும் அவரது அங்கீகரிக்கப்படாத சுயசரிதைகளுக்காக அறியப்படுகிறார்.