அரச குடும்பத்தை அச்சுறுத்தும் மேகன் மார்க்கல்: நிபுணர் குற்றச்சாட்டு
மேகன் மார்க்கல் அரச குடும்பத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய நேர்காணல்களை வழங்குகிறார்.
மிகத் தெளிவாக அவர் அரச குடும்பத்தை அச்சுறுத்துகிறார் என்று தெரிகிறது.
மேகன் மார்க்கல் பிரித்தானிய அரச குடும்பத்தை அச்சுறுத்துவதாக நிபுணர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மார்க்கல், தனது சமீபத்திய நேர்காணல்களில் சில கூற்றுகளுடன் அரச குடும்பத்தை அச்சுறுத்தி வருவதற்காக அரச நிபுணர் ரிச்சர்ட் ஃபிட்ஸ்வில்லியம்ஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், மேகனின் கூற்றுகள் மிகவும் எதிர்மறையாக இருப்பதாக அவர் எச்சரித்தார்.
பிரித்தானிய ஊடகம் ஒன்றிருக்கு பேட்டியளித்த ரிச்சர்ட், மேகன் மார்க்கல் அரச குடும்பத்திற்கு இடையிலான பிளவுகளை குணப்படுத்தும் செயல்முறையைப் பற்றி பேசுகிறார், ஆனால் அதற்கு நேர்மாறாக அவரே அரச குடும்பத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய அம்சங்களைக் கொண்ட நேர்காணல்களை வழங்குகிறார் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதன்மூலம், மிகத் தெளிவாக அவர் அரச குடும்பத்தை அச்சுறுத்துகிறார் என்று கூறினார்.
மேலும், ஹரியின் நினைவுக் குறிப்பு புதிதாக என்ன பிரச்சினைகள் உருவாக்கப் போகிறது என்று தெரியவில்லை என அவர் கூறினார்.