தந்தையின் விவகாரத்தை அம்பலப்படுத்தத் துணிந்த மேகன் மெர்க்கல்... அனுமதி மறுத்த அரண்மனை
Meghan Markle wanted to go public with child sex abuse claims about dad Thomas: தனது தந்தை தாமஸ் மீதான சிறார் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை மேகன் பகிரங்கப்படுத்த விரும்பினார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, மேகன் மெர்க்கல் தனது தந்தை குறித்த குற்றச்சாட்டுகளைப் பகிரங்கப்படுத்த விரும்பினார், ஆனால் பெருநகர காவல்துறையின் அரண்மனை மெய்க்காப்பாளர்களால் அவ்வாறு வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
குழந்தைகளைப் பாதுகாக்க
பிலிப்பைன்ஸ் காவல்துறையினரால், 82 வயதான தாமஸ் மெர்க்கல் சீனியர், சிறார் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்கப்பட்டு வருகிறார் என்பது தெரியவந்ததை அடுத்து, தனது தந்தையைச் சுற்றியுள்ள முந்தைய குற்றச்சாட்டுகள் குறித்து தனக்குத் தெரிந்திருந்தது என மேகன் மெர்க்கல் கடந்த வாரம் வெளிப்படுத்தியிருந்தார்.

மேகன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2018-ஆம் ஆண்டில் பெருநகர காவல்துறையினரால் தனக்குக் கவலையளிக்கும் குற்றச்சாட்டுகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டதாகவும், தனது குழந்தைகளைப் பாதுகாக்கும் விருப்பமே தனது தந்தையுடனான எட்டு வருடப் பிரிவுக்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தாமஸ் மெர்க்கல் மீதான குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒரு கடிதம் 2019 ஜனவரியில் தங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அந்தத் தகவலை வெளிநாடுகளில் உள்ள சட்ட அமலாக்க முகமைகளுக்கு அனுப்பவில்லை என்றும் பெருநகர காவல்துறை பின்னர் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது, அந்த நேரத்தில் மேகன் அந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேச விரும்பியதாகவும், ஆனால் அரச குடும்பம் மற்றும் சிறப்புப் பாதுகாப்பு மெய்க்காப்பாளர்களில் ஒருவர் அவரிடம், இதை எங்களிடம் விட்டுவிடுங்கள், நாங்கள் விசாரிப்போம் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, 2018-ல் தனது தந்தையுடனான அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்த முடிவு குறித்து பகிரங்கமாக எந்த விளக்கமும் அளிக்க வேண்டாம் எனவும் மேகனுக்கு அதே அதிகாரி அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் கால் அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைந்து கொண்டிருந்த தனது தந்தைக்கு, மேகன் ஒரு இறுதிக் கடிதத்தை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
பாலியல் சேவைக்காக
அதில், தமது தந்தை ஒரு கொடுமைக்காரர் என்பது தனக்குத் தெரியும் என்றும், அவரது பேரக்குழந்தைகளை அவரால் ஒருபோதும் பார்க்க முடியாது என்றும் மேகன் தெரிவித்திருந்தார்.

தென்கிழக்கு ஆசிய நாட்டில் பாலியல் சேவைக்காகப் பணம் கொடுத்ததை தாமஸ் மெர்க்கல் ஒப்புக்கொண்டுள்ளார், ஆனால் அது வயதுவந்த பாலியல் தொழிலாளர்களுடன் மட்டுமே என்று கூறியுள்ளார்.
மேலும், சிறார் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்ததையும் அவர் மறுத்துள்ளார். இந்த நிலையில், குற்றச்சாட்டுகளைக் கையாண்ட விதம் தொடர்பாக, காவல்துறை கண்காணிப்பு அமைப்பிடம் தாமாகவே முன்வந்து புகார் அளித்ததாக பெருநகர காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.