மன்னருக்கு உடல்நலம் பாதித்தும் மவுனம் காக்கும் மேகன்: ஆனால் யார் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார் பாருங்கள்...
பிரித்தானிய மன்னர் சார்லசுக்கு உடல்நலம் பாதிப்பு என செய்தி வெளியானதும், அவர் விரைவில் நலம்பெறவேண்டும் என வாழ்த்தும் வாழ்த்துச் செய்திகள் உலகம் முழுவதுமிருந்து வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
ஆனால், அவரது இளைய மருமகளான, அதாவது இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் மெர்க்கல், மன்னரை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை.
ஆனால் யார் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார் பாருங்கள்...
பிரித்தானியாவின் மன்னர், தனது கணவரின் தந்தை என்ற நிலையில், மேகன் மன்னரை உடனடியாக தொடர்பு கொண்டு பேசியிருக்கவேண்டும். ஆனால், அவர் மன்னரை தொடர்புகொள்ளவும் இல்லை, அவர் நலம்பெற வாழ்த்துச் செய்தியும் அனுப்பவும் இல்லை.
ஆனால், எதிர்பாராத ஒருவரிடமிருந்து மன்னருக்கு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது. அது யார் தெரியுமா? தாமஸ் மெர்க்கல்!
ஆம், மேகன் மெர்க்கலின் தந்தையான தாமஸ், மன்னர் சார்லசின் உடல் நல பாதிப்பு குறித்து அறிந்ததும், அவர் நலம் பெற வாழ்த்தி வாழ்த்துச் செய்தி ஒன்று அனுப்பியுள்ளார்.
Netflix
79 வயதாகும் தாமஸ், மன்னருக்கு அனுப்பியுள்ள செய்தியில், ‘நான் மன்னருக்கு எனது அன்பைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன், அவர் விரைவில் உடல் நலம் பெறுவார் என நம்புகிறேன். அவருக்கு எல்லா நன்மையும் கிடைக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
எரியும் நெருப்பில் எண்ணெய்
ஆனால், தன் தந்தை மன்னருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய விடயம் மேகனுக்கு கோபத்தை ஏற்படுத்தக்கூடும் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ஹரி ராஜ குடும்பத்தைப் பிரிந்ததற்கு தான்தான் காரணம் என உலகமே கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கும் நிலையில், தான் இன்னமும் மன்னரை சந்திக்கவில்லை என்பது ஊடகங்களில் பெரும் பேசுபொருளாகியிருக்கும் என்பது மேகனுக்கு நன்றாகத் தெரியும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், தன் தந்தை தன்னை முந்திக்கொண்டு மன்னருக்கு வாழ்த்துக் கூறியுள்ளது, அவருக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலத்தானே இருக்கும்.
ஆக, மேகன் தற்போது கோபத்தில் கொந்தளித்துக்கொண்டிருப்பார் என்றே தோன்றுகிறது!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |