பிரித்தானிய இளவரசர் ஹரியை மேகன் சீக்கிரம் விவாகரத்து செய்துவிடுவார்: மேகனின் அண்ணன் கூறும் காரணம்
பிரித்தானிய இளவரசர் ஹரியை அவரது மனைவியான மேகன் சீக்கிரம் விவாகரத்து செய்துவிடுவார் என மேகனின் அண்ணன் தெரிவித்துள்ளார்.
மேகனின் அண்ணனான தாமஸ் மார்க்கல் ஜூனியர் (55), ஒரு கணவராக இளவரசர் ஹரியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
மேகனின் முதல் திருமணம் வெறும் இரண்டு ஆண்டுகளே நீடித்தது என்று கூறியுள்ள தாமஸ், அப்படிப் பார்த்தால், இளவரசர் ஹரியை மேகன் விவாகரத்து செய்ய கொஞ்ச நாட்களே உள்ளன என்கிறார்.
தன் முதல் கணவரை அப்படியே கைவிட்டுவிட்டு வந்து விட்ட மேகன், இனி ஹரியையும் கைவிட்டுவிடுவார் என்று கூறியுள்ள தாமஸ், Australia's Big Brother VIP என்ற நிகழ்ச்சியில் பங்குகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின்போது தன் சக போட்டியாளர்களிடம் அவர் இந்த விடயங்களை பகிர்ந்துகொண்டார்.
மேகன், 2011ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளரான Trevor Engelson (44) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
2013ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், திருமணமாகி 23 மாதங்களே ஆன நிலையில், தங்களுக்குள் சரி செய்யமுடியாத வேறுபாடுகள் உள்ளதாகக் கூறி, அவர்கள் இருவரும் விவாகரத்து செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.