திருமண மோதிரம் அணியாத இளவரசி கேட்டும் மேகனும்... பின்னணியில் வெவ்வேறு காரணங்கள்
பிரித்தானிய இளவரசி கேட்டும், ஹரியின் மனைவியாகிய மேகனும், தங்கள் கையில் திருமண மோதிரம் அணியாமல் காணப்படும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகின.
பின்னணியில் வெவ்வேறு காரணங்கள்
இளவரசி கேட்டைப் பொருத்தவரை, அவருக்கும் இளவரசர் வில்லியமுக்கும் இடையிலான திருமண வாழ்வு எப்படி இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விடயம்தான்.
அதுவும், கேட்டுக்கு புற்றுநோய் பாதித்தபின், அவருக்கும் வில்லியமுக்குமிடையிலான காதல் வாழ்வில் எவ்வளவு நெருக்கம் ஏற்பட்டது என்பது சமீபத்தில் அவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் உறுதியானது.
ஆக, இளவரசி கேட்டின் கையில் திருமண மோதிரம் இல்லை என்றால், அது ஒருவேளை அளவு குறைக்க அல்லது சுத்தமாகுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால், மேகனுடைய கதை அப்படி இல்லை. ஏற்கனவே ஹரியும் மேகனும் தனித்தனியாக வாழ்ந்துவருவதாக வதந்திகள் பரவிவருகின்றன.
இருவரும் தனித்தனியே பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இருவரும் பிரியப்போவதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
ஆக, மேகன் கையில் திருமண மோதிரம் இல்லாததன் பின்னாலுள்ள உண்மை என்ன என்னும் கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |