தனது கர்ப்ப கால உணவு விருப்பங்களை பகிர்ந்த மேகன் மார்க்கல்
பிரித்தானிய இளவரசர் ஹரியுடன் (Harry) கனடா சென்றிருந்த மேகன் மார்க்கல் (Meghan Markle), தனது கர்ப்ப கால உணவு விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இருவரும் 2025 Invictus Games தொடக்க விழாவிற்கு சென்ற நிலையில், வான்கூவரில் உள்ள Vij's என்ற இந்திய உணவகத்தில் இரவு உணவு அருந்தியுள்ளனர்.
இதையடுத்து, அங்கு உள்ள பிரபல உணவமைப்பாளர் விக்ரம் விஜ் (Vikram Vij), மேகன் தனது கர்ப்ப காலத்தில் எந்த உணவை விரும்பி சாப்பிட்டார் என்பதை வெளியப்படுத்தியுள்ளார்.
தனது மகன் ஆர்ச்சியும் மகள் லிலிபெட்டும் வயிற்றில் இருந்த காலங்களில், பெரும்பாலும் இந்திய உணவுகளை மட்டுமே உட்கொண்டதாக மேகன் கூறியதாக விக்ரம் விஜ் தெரிவித்துள்ளார்.
மேகனிடமிருந்து இதனை அறிந்த விக்ரம் விஜ், கர்ப்ப காலத்தில் "இது உங்களுக்கு சிறந்த உணவாக இருந்திருக்கும்" எனக் கூறினார்.
மேலும், மேகன் தனக்கு சமையல் செய்ய மிகவும் பிடிக்கும் என கூறியதாகவும், அதனால் அவர் ஏப்ரான் ஒன்றை பரிசளித்ததாகவும் விக்ரம் விஜ் கூறியுள்ளார்.
உணவகத்திற்கு ஹரி-மேகன் தம்பதியுடன் அவர்களது நண்பர்கள் மைக்கேல் புப்லே, அவரது மனைவி லுயிசானா மற்றும் மூன்று நண்பர்கள் சென்றுள்ளனர்.
இந்த உணவகத்தில் முன்னதாக இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் கூட உணவருந்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Meghan Markle's pregnancy cravings, Prince Harry Meghan Markle Canada trip, Indian Food, 2025 Invictus Games