இளவரசி கேட் முன் மேகன் தலைகுனியும் நிலை உருவாகலாம்: ராஜ குடும்ப எழுத்தாளர் புதிய தகவல்
இளவரசர் ஹரி குடும்பம் பிரித்தானியாவுக்கு திரும்ப இருப்பதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், மேகன் பிரித்தானியா திரும்ப வாய்ப்புள்ளதா என ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இளவரசி கேட்டுக்கு மேகன் வணக்கம் செலுத்தும் நிலை உருவாகலாம்
இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மீண்டும் பிரித்தானியா திரும்ப வாய்ப்புள்ளதா என ராஜ குடும்பம் எழுத்தாளரான Andrew Morton என்னும் ராஜ குடும்ப எழுத்தாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த Andrew Morton, டயானா என்னும் புத்தகத்தை எழுதியவர் ஆவார்.
Credit: Splash
அவரிடம் மேகன் மீண்டும் பிரித்தானியா திரும்புவாரா என கேள்வி எழுப்பப்பட்டபோது, மேகன் பிரித்தானியா திரும்பினால், ராணியாகும் கேட் முன் தலை குனிந்து வணக்கம் செலுத்தும் நிலை அவருக்கு உருவாகலாம். ஆகவே, அவர் பிரித்தானியா திரும்ப வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார் Andrew.
டயானா குறித்து தெரிவித்துள்ள தகவல்
அத்துடன், இதுவரை வெளிவராத புதிய தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் Andrew. அது என்னவென்றால், சார்லஸ் தன் மனைவியான கமீலாவுடன் இத்தாலிக்கு சென்று தங்கள் வாழ்வை தங்கள் விருப்பப்படி செலவிடலாம் என்றும், இளவரசர் வில்லியமை மன்னராக்கலாம் என்றும் டயானா விரும்பினார் என்று கூறியுள்ளார் Andrew.
Credit: Getty
ஆனால், டயானாவின் விருப்பம் நிறைவேறவில்லை.
அதுமட்டுமல்ல, ஒருமுறை, தனக்கு உணவு பரிமாறுபவராக இருந்த Paul Burrell என்பவரிடம், என் கணவருக்கு மன்னராகும் தகுதி கிடையாது என்று கூறியிருக்கிறார் டயானா.
அத்துடன், 2018ஆம் ஆண்டு Paul Burrell அளித்த பேட்டி ஒன்றின்போது, இங்கிலாந்தின் அரியணையில் சார்லசும் கமீலாவும் மன்னர், ராணியாக அமருவதை நாம் காணப்போவதேயில்லை என்று நான் நினைக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார் டயானா. ஆனால், அவர் கூறியதற்கு மாறாகவே எல்லாம் நடந்துவிட்டது!
The Mirror
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |