எனது நிலைமை என் அண்ணனுடைய பிள்ளைகளுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது: கவலைப்பட்ட ஹரிக்கு இளவரசர் வில்லியமுடைய பதில்
இளவரசர் ஹரி எழுதிய புத்தகம் ராஜ குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.
தனது புத்தகம் தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த இளவரசர் ஹரி, மேலும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இளவரசர் ஹரியின் புத்தகம்
இளவரசர் ஹரி, ராஜ குடும்பத்தின் தான் ஒரு Spare ஆக, அல்லது ஒரு substitute ஆக கருதப்படுவதை உணர்த்தும் வகையில் தனது புத்தகத்துக்கு Spare என பெயர் வைத்துள்ளார். அதாவது, வில்லியம் போன்றவர்கள் இல்லாவிட்டால், அவர்களுக்கு மாற்றாக பயன்படுத்தும் ஒரு நபர் போல தான் கருதப்படுவதாக அவர் உணர்கிறார்.
வில்லியமுடைய பிள்ளைகள் குறித்து கவலை
இளவரசர் ஹரி ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் தனது அண்ணனாகிய இளவரசர் வில்லியமுடைய மூன்று பிள்ளைகளையும் குறித்துக் கவலைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வில்லியமுடைய பிள்ளைகளில் ஒருவராவது தன்னைப்போல spare ஆக ஆகிவிடக்கூடாது என தான் கவலைப்படுவதாகவும், அந்த எண்ணம் தனக்கு வேதனையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார் ஹரி.
ஆனால், என் பிள்ளைகளைக் குறித்து நீ கவலைப்படவேண்டாம், என் பிள்ளைகளுக்கு நான்தான் பொறுப்பு, நீயில்லை, என இளவரசர் வில்லியம் தன்னிடம் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் இளவரசர் ஹரி.