அவ்வளவுதான்... இனி மேகனுக்கு இடம் கிடையாது; ராஜ குடும்ப நிபுணரின் கருத்து
பிரித்தானிய மன்னர் சார்லஸ், தன் முடிசூட்டுவிழாவிற்கு, அமெரிக்காவில் வாழும் தன் இளைய மகன் ஹரிக்கும் அவரது மனைவி மேகனுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
அழைப்பை ஏற்றுக்கொண்ட ஹரி
முதலில் ஹரியும் மேகனும் மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு வருவது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில், ஹரி மட்டும் விழாவிற்கு வர இருப்பதாக தற்போது அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தன் இளைய மகன் தன்னுடைய முடிசூட்டுவிழாவிற்கு வருவதை அறிந்து, மன்னர் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
Credit: Getty
ராஜ குடும்ப நிபுணர் கருத்து
மன்னருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு, விழாவிற்கு ஹரி மட்டுமே வருகிறார். அவரது மனைவி மேகன் வரவில்லை.
இந்நிலையில், ஹரியின் மனைவி மேகன் முடிசூட்டுவிழாவிற்கு வராதது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜ குடும்ப நிபுணரான Rob Jobson, மேகன் மன்னருடைய முடிசூட்டுவிழாவிற்கு வராததால், இனி ராஜ குடும்பத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சியிலும் இனி மேகனை நாம் பார்க்கமுடியாது என்றே தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.
அவர் இனி ராஜ அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதானால், அது மன்னருடைய இறுதிச்சடங்குக்காக வேண்டுமானால் இருக்கலாம் என்கிறார் Rob Jobson.
Credit: Getty