அழகான நட்பு, சில நேரங்களில் அவருடன் அது உணர்ச்சிவசமானது: மேகன் மார்க்கல் கூறும் நபர் யார் தெரியுமா?
ஆடை வடிவமைப்பு இயக்குநர் கிளாரே வாயிட் கெல்லர் உடன் தனக்கு அழகான நட்பு இருப்பதாக மேகன் மெர்க்கல் தெரிவித்துள்ளார்.
கிளாரே வாயிட் கெல்லர்
இளவரசி மேகன் டிசைனர் ஆடைகள் மற்றும் நேர்த்தியான நகைகளை அணிந்து பழகியவராக இருந்தாலும், தனது ஆடம்பரமான பாணிக்காக அங்கீகரிக்கப்படுகிறார்.
இருப்பினும் அவர் ஜப்பானிய சாதாரண உடைகளின் பிராண்டான Uniqloவின் பல ரகங்கள் தன்னிடம் இருப்பதாக கூறுகிறார்.
மேகன் கடந்த மாதம் தனது கிளாரே வாயிட் கெல்லரை Creative Director ஆக நியமித்ததைத் தொடர்ந்து இதனை ஒப்புக்கொண்டார்.
மேலும், கெல்லருடன் தனக்கு அழகான நட்பு இருப்பதாக மேகன் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கெல்லரின் பிராண்ட் ஆடைகள், Trench Coat உட்பட Uniqloவின் பொருட்கள் பலவற்றை வைத்துள்ளார். அவற்றை நவீனமான மற்றும் இயக்கமான நயமிக்கவை என்று மேகன் குறிப்பிடுகிறார்.
தனிப்பட்ட முறை நட்பு
மேகனின் திருமண கவுனை கிளாரே உருவாக்கிய பிறகு, பல சந்தர்ப்பங்களில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அவரது லேபிளையே இளவரசி பயன்படுத்தினார்.
கிளாரே குறித்து இளவரசி மேகன் மேலும் கூறுகையில், "சில நேரங்களில் அவருடனான நட்பு தனிப்பட்ட முறையில் ஆழமானது, சில நேரங்களில் அது உணர்ச்சிவசமானது" என்றார்.
அதேபோல் கிளாரே ஒருமுறையில் மேடையில் இருந்தபோது, 'இந்தப் பெண் மிகவும் அற்புதமானவர். நான் மேகனை தனிப்பட்ட முறையில் அறிவேன்' என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |