பாராசூட் மூலம் குதித்த ஹரி... பதறிய மேகன்: ஒரு சுவாரஸ்ய தகவல்
Prince Harry wasted no time calling his wife Meghan Markle after completing a daring skydive: பாராசூட் மூலம் குதிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஹரி, பதற்றத்திலிருந்த தன் மனைவி மேகனை உடனடியாக மொபைலில் அழைத்ததைக் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி, தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக பாராசூட் மூலம் விமானம் ஒன்றிலிருந்து குதித்துள்ளார்.
பாராசூட் மூலம் குதித்த ஹரி...
இளவரசர் ஹரி, கடந்த ஆண்டு எட் மார்ஷல் (102) என்னும் இரண்டாம் உலகப்போர்க்கால ராணுவ வீரரை சந்தித்துள்ளார்.

மார்ஷல், பாராசூட் மூலம் விமானத்திலிருந்து குதிக்கும் கனேடிய பாராட்ரூப்பர் ஆவார்.
ஆகவே, தாங்கள் இருவரும் சேர்ந்து விமானத்திலிருந்து குதிப்பது என இருவரும் திட்டமிட்டுள்ளார்கள்.
அதன்படி, நேற்று மார்ஷலை சந்தித்துள்ளார் ஹரி. ஆனால், 102 வயதாகும் மார்ஷலை விமானத்திலிருந்து குதிக்க மருத்துவர்கள் அனுமதி மறுத்துள்ளார்கள்.
ஆகவே, மார்ஷலின் பேரனாகிய பெய்லியும் ஹரியும் சேர்ந்து பாராசூட் மூலம் விமானத்திலிருந்து குதிக்க, அதை விமானத்திலிருந்தவண்ணம் பார்த்து ரசித்துள்ளார் மார்ஷல்.

பதறிய மேகன்
ஆனால், ஹரி பாராசூட் மூலம் விமானத்திலிருந்து குதிக்கும் விடயம் அவரது மனைவியான மேகனை பதற்றமடையச் செய்துள்ளது.
ஆகவே, விமானத்திலிருந்து குதித்து தரையை அடைந்த அடுத்த கணம், மேகனை மொபைலில் அழைத்துள்ளார் ஹரி.

பாராசூட் மூலம் குதிப்பதற்கு நான் மேகனை சம்மதிக்கவைக்கத் தேவை ஏற்படவில்லை. என்றாலும், அவர் பதற்றத்திலிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.
ஆகவேதான் விமானத்திலிருந்து குதித்து தரையை அடைந்த உடனே நான் அவரை அழைத்து விடயத்தைத் தெரிவித்தேன். அவரும் நிம்மதியடைந்தார் என்று கூறியுள்ளார் ஹரி.
இந்த நிகழ்வின் மூலம் கிடைக்கும் பணம், கனேடிய ராணுவ தொண்டு நிறுவனங்களைச் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.