ஹரி இல்லாமல் தனியாக சுற்றும் மேகன்: பிரபலங்களிடம் கெஞ்சுவதாக கேலி
இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டமிட்டுவருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகிய நிலையில், ஹரியை வீட்டில் விட்டுவிட்டு மேகன் மட்டும் பார்ட்டிகளுக்குச் செல்வதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹரி இல்லாமல் பார்ட்டிக்குச் செல்லும் மேகன்
ஹரியும் மேகனும் நகமும் சதையும்போல், கைகளைப் பிடித்துக்கொண்டே சுற்றிக்கொண்டிருந்த காலம் போய், இப்போது ஹரியை வீட்டில் விட்டுவிட்டு, மேகன் மட்டும் பார்ட்டிகளுக்குச் செல்வதாக ஹெரிவிக்கிறார் Petronella Wyatt என்னும் ஊடகவியலாளர்.
Credit: Getty
ஹரி மேகன் வீட்டுக்கு அருகே வாழும் தன் நண்பர்கள் பங்கேற்கும் பார்ட்டிகளில் இப்போதெல்லாம் அடிக்கடி மேகனைப் பார்க்கமுடிவதாக அவர் கூறுகிறார்.
அதுவும், ஹரியை வீட்டில் விட்டுவிட்டு தனியாக பார்ட்டிகளுக்கு வரத் துவங்கியுள்ளார் மேகன் என்கிறார் Petronella Wyatt.
பிரபலங்களிடம் கெஞ்சல்
சமீபத்தில் Petronella பார்ட்டி ஒன்றிற்குச் சென்றிருந்தாராம். அப்போது, தன்னுடன் பார்ட்டியில் பங்கேற்ற பிரபலம் ஒருவருக்கு மேகனிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
Credit: AFP
அவருக்கு மட்டுமல்ல, அந்த பார்ட்டியில் பங்கேற்ற பல பிரபலங்களுக்கு மேகன் குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். அதை அவர்கள் Petronellaவிடம் காட்டியுள்ளார்கள்.
நாம் சேர்ந்து ஜாலியாக சுற்றலாமா என கெஞ்சும் தோரணையில் அந்த குறுஞ்செய்திகள் இருந்துள்ளன. அவற்றைக் காட்டி அவர்கள் கேலி செய்து சிரித்துள்ளார்கள்.
Credit: Getty
மேகனுடைய குறுஞ்செய்திகளுக்கு நீங்கள் பதில் அனுப்புவீர்களா என Petronella கேட்க, அந்த பிரபலங்கள், ஆம், அவர் ஒரு கோமகள் அல்லவா, அதனால் அவருக்கு பதில் அனுப்புவோம், ஆனால், அவரால் பட்ட பாடு போதும் என்று சொல்லி சிரிக்கிறார்கள் என்கிறார் அவர்.
Credit: Alamy