அரச குடும்ப உறுப்பினராக அப்போதே விரும்பாத மேகன் மார்க்கல்
பிரித்தானிய இளவரசி மேகன் மார்க்கல் அரச குடும்ப உறுப்பினராக விரும்பாததால், பல தருணங்களில் விதிகளை மீற தயாராக இருந்துள்ளார்.
கணவரைப் போலவே பிரபலம்
அரச குடும்பத்தில் உறுப்பினராக குறுகிய காலமே மேகன் மார்க்கல் இருந்தபோதிலும், அவை நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்துள்ளது.
அவர் அரச குடும்பத்தில் இருந்த காலத்தில் விதிகளை மீறத் தயாராக இருப்பதாக மீண்டும் மீண்டும் காட்டியிருக்கிறார்.
2018ஆம் ஆண்டில் அவரும் ஹாரியும், தங்கள் மூன்றாவது அரச குடும்ப நிகழ்ச்சிகாக வேல்சுக்கு சென்றது குறிப்பிடத்தக்க உதாரணங்களில் ஒன்று.
கார்டிஃப் கோட்டைக்கு சென்றபோது, கூட்டத்தினர் அவரது பெயரை ஆரவாரம் செய்தபோது, மேகன் கணவரைப் போலவே தன்னை பிரபலம் என்பதைப் போல காட்டிக்கொண்டார்.
மேலும், அரச குடும்ப உறுப்பினர்களின் கையெழுத்துகள் நகலெடுக்கப்படும் அல்லது போலியாக எழுதப்படும் அபாயம் உள்ளதால் தடை உள்ளது.
ஆட்டோகிராஃப்
ஆனால் அதனை மீறும் வகையில், ரசிகர் ஒருவர் ஆட்டோகிராஃப் கேட்டபோது மேகன் அதற்கு தயாராக இருந்துள்ளார்.
எனினும் அவர் தனது சொந்த பெயரில் கையெழுத்திடுவதற்கு பதிலாக, சிறுமியின் புத்தக நோட்டில் "Hi Kaitlin" என எழுதினார்.
அதேபோல், அரச குடும்பத்தில் உள்ளவர்கள் தங்களை பொதுமக்களால் முத்தமிட அனுமதிக்கக்கூடாது என்பது பாரம்பரிய நெறிமுறையாகும். ஆனால், மேகன் தனது கார்டிஃப் பயணத்தில் ஒருவரை கையில் முத்தமிட அனுமதித்தார்.
அத்துடன் செல்ஃபி புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த நேரத்தில் மேகனின் போக்கு அரச குடும்பத்தின் விதிகளை மீறுவதில் சில புருவங்களை உயர்த்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |