காதல் கணவனை இழந்த நடிகை மேக்னாராஜுக்கு திருமணமா? வைரலாகும் புகைப்படம்: கிடைத்த பதில்
பிரபல நடிகையான மேக்னா ராஜ் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக செய்தி வெளியானநிலையில், அது குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.
தமிழில் காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை மேக்னாராஜ் கன்னடம் மற்றும் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சுந்தர் ராஜ் மற்றும் பிரமிலா ஜோஷியின் மகள் ஆவார்.
இந்நிலையில், மேக்ரனா ராஜ் தமிழில் நடிகராஜ அர்ஜுனின் மருமகனும், கன்னடத்தின் முன்னணி நாயகனுமான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இருப்பினும், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜுன் 7-ஆம் திகதி சிரஞ்சீவி சர்ஜா தீடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவர் உயிரிழந்த நேரத்தில், மேக்னா ராஜ் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின் மகனுடன் தன்னுடைய நாட்களை மேக்னாராஜ் கழித்து வரும் நிலையில், மேக்னா ராஜ் கன்னடா பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் Pratham-ஐ திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது.
ஆனால், இதற்கு Pratham மறுப்பு தெரிவித்து, இது உண்மையில்லை, இது ஒரு வதந்தி என்று யூ டியூப் பக்கத்தில் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேக்னா ராஜுற்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமே இல்லையாம், அவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.