மனைவி 6 மாத கர்ப்பம்! மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகர்... நினைவு நாளில் உருக்கமான பதிவு
நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் இரண்டாமாண்டு நினைவு நாளான இன்று அவர் மனைவி மேக்னா ராஜ் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவு மனதை உருக்கியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் மேக்னா ராஜ். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இருந்தார்.
நடிகை மேக்னா ராஜ் நீண்ட காலமாக கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து இருந்தார். பின் இவர்கள் இருவரும் 2018-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்கள். இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி சிரஞ்சீவி தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.
உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை இவரை சர்ஜாவை காப்பாற்ற முடியவில்லை. 39 வயதேயான சிரஞ்சீவியின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவர் இறக்கும் போது மேக்னா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். பின்னர் சிரஞ்சீவி பிரிவில் சோகத்தில் இருந்த மேக்னாவிற்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் சிரஞ்சீவியின் 2ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையடுத்து தனது கணவருடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை மேக்னா ராஜ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த உருக்கமான பதிவில், நீயும் நானும். உன்னை போல் ஒருவர் இங்கு இருந்ததில்லை, உன்னை போல் யாரும் இருக்க மாட்டார்கள்.. லவ் யூ என பதிவிட்டுள்ளார்.