கணவனை முத்தமிட்டு வழியனுப்பிய நடிகை! திருமணநாளில் மிக உருக்கமான பதிவு
மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ், திருமணநாளன்று மிக உருக்கமாக எழுதிய பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
புகழ்பெற்ற கன்னட நடிகர்
கடந்த 2009ம் ஆண்டு திரையுலகில் கால் பதித்த சிரஞ்சீவி சர்ஜா இதுவரை 19 படங்களில் நடித்துள்ளார்.
பிரபல தமிழ் நடிகரான அர்ஜூனின் உறவினர் ஆவார், இந்நிலையில் 2020ம் ஆண்டு யூன் மாதம் திடீர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
அப்போது இவர் மனைவியான மேக்னா ராஜ் 6 மாதம் கர்ப்பிணியாக இருந்தார், இருவரும் 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
மனைவியின் உருக்கமான பதிவு
சில மாதங்களிலேயே மேக்னாவுக்கு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது, அக்குழந்தைக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயரிட்டு பாசமாக வளர்த்து வருகிறார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேக்னா, அவ்வப்போது தன் குழந்தையுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படம், வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.
அந்தவகையில், மறைந்த கணவரின் பிறந்தநாளன்று மேக்னா வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.
அதில், நான் எப்போதும் கடவுளை மன்னிக்க ஒரே காரணம் ராயானுக்கு எனக்கும் அவர் சரியானதைச் செய்ய அவருக்கு உங்கள் வழிகாட்டுதல் தேவை என்று எனக்குத் தெரியும் என்பதால் தான்.. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பேபி மா என எழுதியுள்ளார்.