இந்திய அணியின் பந்துவீச்சை புரட்டியெடுத்த வீரர்! முதல் சர்வதேச சதம் விளாசல்
வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை இந்திய அணிக்கு எதிராக விளாசியுள்ளார்.
மெஹிதி ஹசன்
டாக்காவில் நடந்து வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ஓட்டங்கள் குவித்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தமது அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்த மெஹிதி ஹசன் மிராஸ், இந்தப் போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடினார்.
அவர் 83 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.
இது அவருக்கு முதல் ஒருநாள் சதம் ஆகும்.
66 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மெஹிதி ஹசன், ஒரு சதம் மற்றும் 2 சதங்களுடன் 753 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
WHAT. A. KNOCK ?
— ICC (@ICC) December 7, 2022
Mehidy Hasan Miraz brings up his maiden ODI century to help Bangladesh to a competitive total ?#BANvIND | Scorecard ? https://t.co/A76VyZDXby pic.twitter.com/rYHU4n5iJr