ட்ரம்புக்கு NO சொன்ன மெலானியா: சமூக ஊடகத்தில் வெளியாகியுள்ள வீடியோ
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப், தன் மனைவியாகிய மெலானியாவை எப்படி சந்தித்தார் என்பது குறித்த வீடியோ ஒன்று சமூக ஊடகமாகிய டிக்டாக்கில் மீண்டும் உலாவரத் துவங்கியுள்ளது.
ட்ரம்புக்கு NO சொன்ன மெலானியா
பார்ட்டி ஒன்றிற்கு சென்றிருந்தபோதுதான் முதன்முதலாக மெலானியாவை சந்தித்துள்ளார் ட்ரம்ப்.
தன்னுடன் ஒரு அழகிய மொடல் இருக்கும்போதே மெலானியாவின் அழகால் கவரப்பட்ட ட்ரம்ப், அவரிடம் தனது தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளார்.
மெலானியாவின் மொபைல் எண்ணை ட்ரம்ப் கேட்க, அவருடன் ஏற்கனவே ஒரு பெண் இருந்ததால், தனது மொபைல் எண்ணை ட்ரம்புக்கு கொடுக்க மறுத்த மெலானியா, ட்ரம்பின் எண்ணை வாங்கிக் கொண்டார்.
சில நாட்களுக்குப் பின் மெலானியா ட்ரம்பை அழைக்க, இருவரும் காதலிக்கத் துவங்கினார்கள். ஆறு ஆண்டுகள் காதலித்த பிறகு, 2005ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக நடைபெற்றது ட்ரம்ப் மெலானியா திருமணம்.
அதன்பின் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றும், மெலானியா பெரும்பாலும் தன் குடும்பத்துடன் நேரம் செலவிட்டாரேயொழிய, தான் அமெரிக்காவின் முதல் பெண்மணி என்றெல்லாம் அலட்டிக்கொண்டதில்லையாம்.
இப்போது, இரண்டாவது முறையாக ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றும்கூட, தனது நேரத்தை பெரும்பாலும் தன் மகனுடனேயேதான் செலவிடுகிறார் மெலானியா.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |