விமான நிலையத்தில் அராஜகம் செய்த நபர்: கட்டுப்படுத்த வந்த பொலிஸாரை அடித்ததால் கைது!
அவுஸ்திரேலியாவின் பெர்த்திலுள்ள உள்நாட்டு விமானத்தில் பொலிஸ் அதிகாரியை தாக்கி ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டு ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தில் அராஜகம்
அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு விமானத்தில் பெர்த்திற்கு சென்றுகொண்டிருந்த பயணிகளில் ஒருவர் சக பயணிகளை தொந்தரவு செய்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து விமான ஊழியர்கள் அவரை கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார்கள் ஆனால் அவர்கள் சொல்வதையும் அந்த நபர் கேட்கவில்லை.
@AFP
இதனால் விமான ஊழியர்கள் பெர்த் விமான நிலையத்திலிருந்த AFP அதிகாரிகளை அழைத்து விமானத்தில் ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக கூறி புகார் அளித்திருக்கிறார்கள்.
உடனே காவல் துறை பெர்த் விமான நிலையத்திலிருந்த விமானத்தில் அந்த பயணியை கீழே இறங்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்த நபர் கீழே இறங்க மறுத்திருக்கிறார்.
காவல் துறையினர் அவரை கைது செய்ய முயன்றுள்ளனர். இதனால் உடனே ஆக்ரோஷமான அந்த நபர் காவல் அதிகாரியை தாக்கியிருக்கிறார்.
@heraldsun
மேலும் அந்த நபரை கட்டுப்படுத்தவும் கைது செய்யவும் ஒரு டேசரை அனுப்ப வேண்டியிருந்ததாக அவர் கூறியுள்ளனர். அச்சம்பவத்தின் போது மூன்று காவல் அதிகாரிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகத் தெரிகிறது.
சிறைத் தண்டனை
செயல் கண்காணிப்பாளர் ஷோனா டேவிஸ் கூறுகையில், எந்தவொரு அமைப்பிலும் சமூக விரோத அல்லது சட்டவிரோத நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் AFP அதைப் பொறுத்துக்கொள்ளாது என கூறியுள்ளார்.
@AFP
"எளிமையாகச் சொன்னால், நாம் ஒருவரையொருவர் எப்படி நடத்த விரும்புகிறோமோ - மரியாதையுடனும் பொதுவான கண்ணியத்துடனும் நடத்த வேண்டும்," என்று ஆக்டிங் சப்ட் டேவிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் ஒழூங்கினமாக நடந்து கொண்ட அந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.