பெயரை கேட்டாலே அச்சத்தில் உறைந்த மெல்போர்ன் மக்கள்..மோசமான நிலையில் மீட்கப்பட்ட நபர்
Fadi Haddara was shot in Altona North: அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நிழலுலக பிரமுகராக அறியப்பட்ட ஃபாடி ஹத்தாரா மோசமான நிலையில் மீட்கப்பட்டார்.
அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நிழலுலக பிரமுகரான ஃபாடி ஹத்தாரா, சந்தேகிக்கப்படும் கும்பல் மோதல் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மோசமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
நிழலுலக பிரமுகராக
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நிழலுலக பிரமுகராக மக்களை அச்சுறுத்தி வந்தவர் 48 வயதான ஃபாடி ஹத்தாரா (Fadi Haddara).
பல ஆண்டுகளாக மெல்போர்னில் மற்றவர்கள் அஞ்சும்படியாக இருந்த ஹத்தாரா, விக்டோரியாவின் சட்டவிரோத புகையிலை வர்த்தகத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்ததாக சந்தேகிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை Altona North பகுதியில் உள்ள மேரிகோல்ட் அவென்யூவில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் வைத்து ஃபாடி ஹத்தாரா (48) சுடப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில்
பின்னர் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் கும்பல்களுக்கு இடையிலான மோதலில் நடந்ததாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், காவல்துறையினர் ஒரு குற்ற நிகழ்விடத்தை அமைத்தனர். இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |