தவறவிட்ட கேட்சை புரண்டு பிடித்த வீரர்! வைரலாகும் வீடியோ
பிக்பாஷ் லீக் தொடரில் ப்ரோடி கோச் என்ற வீரர் பிடித்த கேட்ச் ரசிகர்களை மிரள வைத்தது.
பிக்பாஷ் லீக்
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய டி20 லீக் தொடரான பிக்பாஷ் இன்று தொடங்கியுள்ளது. கான்பெர்ராவில் நடந்த முதல் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய மெல்போர்ன் அணி 122 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சிட்னி அணி 9 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மிரட்டல் கேட்ச்
இந்தப் போட்டியில், மெல்போர்ன் அணி வீரர் போல்ட் வீசிய ஓவரில் கில்க்ஸ் அடித்த பந்தை, மாற்று வீரராக பீல்டிங் செய்துகொண்டிருந்த ப்ரோடி கோச் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
One of the more ridiculous catches you will see! #BBL12 @BKTtires | #GoldenMoment pic.twitter.com/mppFakDxgC
— cricket.com.au (@cricketcomau) December 13, 2022
முதலில் அவரது கையில் இருந்து பந்து தவறிய நிலையில், அவர் கீழே விழுந்து புரண்டு தரையில் பந்து படும் முன் ஒற்றைக் கையில் பிடித்து மிரட்டினார்.
இதுதொடர்பான வீடியோவை கிரிக்கெட் அவுஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.