இந்தியாவில் காணாமல் போன மெல்போர்னைச் சேர்ந்த ஆசிரியர்: பின்னர் தெரிய வந்த துரோகம்
இந்தியாவில் இரண்டு வாரங்களாகக் காணாமல் போயிருந்த அவுஸ்திரேலிய ஆசிரியர் ஒருவர், துரோகச் செயல் ஒன்றின் மூலம் அவரது சகோதரராலேயே கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சொத்து காரணமாகக் கொலை
மெல்போர்னைச் சேர்ந்த கணித ஆசிரியரான சுனில் சர்மா, இந்தியாவின் வடமேற்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அமிர்தசரஸுக்குப் பயணம் மேற்கொண்ட பின்னர், மே 22 அன்று காணாமல் போனார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பகல், சர்மா தனக்குச் சொந்தமான ஒரு சொத்து காரணமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்தது.
சர்மாவின் சகோதரர் சதீஷ், அவரது பானத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்த பின்னர், பேஸ்பால் மட்டையால் அவரது தலையில் பலமாகத் தாக்கி கொலை செய்ததாக இந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரது உடல் ஒரு கால்வாயில் வீசப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், காவல்துறையினர் அவரது சடலத்தைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சர்மாவின் மகள் சுர்பி கூறுகையில், தனது மாமா சதீஷும் அவரது கூட்டாளிகளும் ஒரு போலி அதிகாரப் பத்திரத்தை உருவாக்கி, தனது தந்தை மற்றும் அத்தையின் சொத்துக்கள் இரண்டையும் விற்றுவிட்டதாக காவல்துறை அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, தன் தந்தை ஒரு நல்ல மனிதர் என்றும், அவரை அவருடைய சகோதரரின் செயல்களுடன் தொடர்புபடுத்தக் கூடாது என்றும் சர்மாவின் மகள் கூறியுள்ளார்.
மேலும், அவருக்கு நேர்ந்தது அவருக்குச் செய்யப்பட்டது. அவரைப் பாதுகாத்திருக்க வேண்டிய ஒருவரால், கற்பனை செய்ய முடியாத ஒரு துரோகச் செயலுக்கு அவர் பலியாகியுள்ளார் என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |