வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் மசோதாவைக் கொண்டு வந்த இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்...
கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சர் ஐந்து தூண் அணுகுமுறை மூலம் தற்காலிக பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் எளிதாக நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகை செய்யும் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Randeep Saraiதான் இந்த திட்டட்தை மசோதாவாக அறிமுகம் செய்தவர்.
இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த மசோதா ஒன்றின் அடிப்படையில் வெளிநாட்டு தற்காலிக பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் எளிதாக நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறும் திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளார் கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சர்.
லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான Randeep Saraiதான் இந்த மசோதாவைக் கொண்டுவந்தவர்.
கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser, வெளியிட்டுள்ள இந்த புதிய திட்டம், ஐந்து தூண் அணுகுமுறை மூலம் தற்காலிக பணியாளர்கள் மற்றும் சர்வதேச மாணவர்கள் எளிதாக நிரந்தர குடியிருப்பு அனுமதி பெற வழிவகை செய்யும்.
I look forward to making sure all temporary foreign workers and international students find a pathway to permanent residency. #M44
— Randeep S. Sarai (@randeepssarai) September 20, 2022
Read more here: https://t.co/wF2Qhj8WHS pic.twitter.com/lJPE9QK7qC
தூண் 1: அரசு, தற்போதைய புலம்பெயர்தல் இலக்கான 431,645 புதிய புலம்பெயர்ந்தோரை வரவேற்கும்.
தூண் 2: அரசு, தற்போதிருக்கும் எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தை பொருளாதார அடிப்படையில் புலம்பெயர்ந்தோரை கனேடிய புலம்பெயர்தல் அமைப்பு வரவேற்கும் வகையில் புதுப்பிக்கும்.
தூண் 3: எக்ஸ்பிரஸ் நுழைவு மூலம் புலம்பெயர்வதற்காக ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த தகுதிநிலைகள் அகற்றப்பட்டு, அவற்றிற்கு பதிலாக, 16 புதிய தொழில்கள் இணைக்கப்படும்.
தூண் 4: கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு, கியூபெக்குக்கு வெளியிலும் பிரெஞ்சு புலம்பெயர்தலை அதிகர்ப்படுத்த முயற்சி மேற்கொள்வதுடன், முனிசிபல் நாமினி திட்டம் ஒன்றையும் இணைக்க உள்ளது.
தூண் 5: கனேடிய புலம்பெயர்தல் அமைப்பு, விண்ணப்பங்கள் பரிசீலனைத் திறனை அதிகரித்தல், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பை தொழில்நுட்ப மேம்பாடு மூலம் நவீனமயமாக்கல் ஆகிய விடயங்களை மேர்கொண்டு வருகிறது.
கனடாவுக்கு புதிதாக புலம்பெயர்வோர் முடிந்த அளவுக்கு சீக்கிரமாக கனேடிய குடியுரிமை பெறும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
And we’re back!
— Sean Fraser (@SeanFraserMP) September 20, 2022
Kicked things off this session by presenting the ways our government is looking to expand pathways to permanent residency for temporary foreign workers & intl students. A special thanks to my colleague @randeepssarai for bringing forth this important motion. pic.twitter.com/6iT7yMgvDW