ரிஷி சுனக்கை இஸ்லாமியர் என்று நினைத்து வாழ்த்துச் சொல்லிய நாடாளுமன்ற உறுப்பினர்? வைரலாகும் வீடியோ
பிரித்தானிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கை வாழ்த்தும்போது கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பயன்படுத்திய ஒரு வார்த்தையால் வைரலாகியுள்ளார்.
ஒரு கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வித்தியாசம் தெரியாதா என ஒரு பக்கம் விமர்சனம் எழுந்துள்ளது.
பிரித்தானிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கை வாழ்த்தும்போது கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான Bob Seely, 'inshallah' என்னும் வார்த்தையை பயன்படுத்தினார்.
ஆக, Bob Seely, ரிஷியை இஸ்லாமியர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறாரா அல்லது அவர் பொதுவாகவே பேசும்போது இப்படித்தான் பேசுவாரா என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்றொருவரோ, ரிஷி இந்து மதத்தைச் சேர்ந்தவர், கனசர்வேட்டிவ் கட்சியினர் ஒருவர் inshallah என்ற வார்த்தயைப் பயன்படுத்துகிறாரே என கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னொருபக்கம், பரவாயில்லை, பிரித்தானிய நாடாளுமன்றம் ஒரு இந்துவை பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்லாமிய வார்த்தையை பயன்படுத்துகிறார், விதி விளையாடுகிறது என்று கேலியாக கூறியுள்ளார்.
ஒரு கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு, இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வித்தியாசம் தெரியாதா என ஒரு பக்கம் விமர்சனம் செல்ல, மொத்தத்தில் Bob Seely வைரலாகிவிட்டார்.
come next spring come next summer all this in the last few weeks last couple of months i think you know inshAllah is gonna be a distant dream bob seely mp isle of wright sky news rishi sunak pic.twitter.com/sCCNQk9HZ4
— reaction videos (@ShadyAFVideos) October 24, 2022
Bob Seely said inshallah on Sky News, is this in his everyday vocabulary or does he think Rishi is Muslim ?
— candigirl (@cdnnxx) October 24, 2022
Not a Tory MP randomly entering inshallah into a sentence...
— Cinquenta Dois (@HNRQBRGS) October 24, 2022
ESPECIALLY when Rishi is HINDU